கோவை மேட்டுப்பாளையத்தில் ஒரே நாளில் மொத்தமாக கொட்டித் தீர்த்த அதி உச்ச கனமழை- 37 செ.மீ பதிவு!
கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் ஒரே நாளில் 37 செ.மீ மழை கொட்டித் தீர்த்துவிட்டிருக்கிறது. நடப்பு வடகிழக்கு பருவமழையில் அதி உச்சமான மழைப் பதிவு இது. நீலகிரி மாவட்டம் கீழ் கோத்தகிரியில் 24 செ.மீ, கவுந்தபாடியில் 15 செ.மீ மழையும் வெளுத்தெடுத்திருக்கிறது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை வெளுத்தெடுத்து கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் கனமழை கொட்டிக் கொண்டிருக்கிறது. கனமழையால் 8 மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் 37 செ.மீ அளவுக்கு அதி உச்ச கனமழை பதிவாகி இருக்கிறது. இதனைத் தொடர்ந்து மேட்டுப்பாளையம் தாலுகாவில் அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழையால் கோவை குற்றாலம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
மேலும் உதகை- மேட்டுப்பாளையம் ரயில் பாதையில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் மலை ரயில் பாதை சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் பாதையில் நிலச்சரிவால் விழுந்த பாறைகளை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதேபோல நீலகிரி மாவட்டம் கீழ் கோத்தகிரியில் 24 செ.மீ மழை பதிவாகி இருக்கிறது. கவுந்தபாடியில் 15 செ.மீ மழை கொட்டித் தீர்த்துள்ளது.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications