மேட்டூர் அணையின் நீர்மட்டம் 44 அடியாக சரிவு.. தண்ணீர் தர கர்நாடகா மறுப்பு.. மின் உற்பத்தி பாதிப்பு
சேலம்: மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 375 அடியாக குறைந்துள்ளதால் நீர்மட்டம் 44 அடியாக சரிவடைந்துள்ளது. சுரங்க பாதை வழியாக திறந்து விடப்படும் தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளதால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கருகும் நிலையில் உள்ள குறுவைப் பயிர்களைக் காக்க வினாடிக்கு 5000 கன அடி வீதம் 15 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று காவிரி நீர் ஒழுங்குமுறைக் குழு கர்நாடக அரசுக்கு ஆணையிட்டிருக்கிறது. இந்த நீர் தமிழகத்திற்கு போதுமானதல்ல என்றாலும் கூட, அதைக் கூட தமிழகத்திற்கு திறந்து விட முடியாது என்று கர்நாடக முதலமைச்சர் சித்தராமய்யாவும், துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமாரும் அறிவித்துள்ளனர்.

காவிரி நடுவர் மன்றம், உச்சநீதிமன்றம் ஆகியவை அளித்த தீர்ப்புகளின் அடிப்படையில் தமிழ்நாட்டிற்கு கர்நாடக அரசு இன்று வரை 102.30 டி.எம்.சி தண்ணீர் வழங்கியிருக்க வேண்டும். ஆனால், கர்நாடகம் இதுவரை 35 டி.எம்.சி தண்ணீரைக் கூட வழங்கவில்லை. கர்நாடகத்திலிருந்து இதுவரை தமிழ்நாட்டுக்கு வந்த தண்ணீரில் கூட பெருமளவு நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து வந்தது தானே தவிர, கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்பட்டது அல்ல.
வினாடிக்கு 5000 கன அடி வீதம் 15 நாட்களுக்கு தமிழ்நாட்டிற்கு திறந்து விடுமாறு காவிரி ஒழுங்குமுறை குழு ஆணையிட்டுள்ள தண்ணீரின் மொத்த அளவு 6.25 டி.எம்.சி மட்டும் தான். இதை விட பத்து மடங்கு அதிகமாக 63.80 டி.எம்.சி தண்ணீர் கர்நாடக அணைகளில் உள்ளது. இவ்வளவு தண்ணீரை வைத்துக் கொண்டு தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க கர்நாடக அரசு மறுக்கிறது.
பருவ மழை தமிழகத்தில் கைகொடுக்காத காரணத்தால் மேட்டூர் அணைக்கு போதிய அளவு தண்ணீர் வரவில்லை. கர்நாடக அரசும் காவிரி ஆற்றில் போதுமான தண்ணீரையும் திறக்கவில்லை. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வந்தது. கடந்த ஜூன் மாதம் 12ஆம் தேதியன்று குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. விநாடிக்கு 10000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் தற்போது அணையில் இருந்து விநாடிக்கு 6500 கனஅடி தண்ணீர் மட்டுமே திறக்கப்படுகிறது.
இந்த நிலையில் கர்நாடகா அணைகளில் இருந்து விநாடிக்கு 2750 கனஅடி தண்ணீர் மட்டுமே திறக்கப்பட்டு வருகிறது. மேட்டூர் அணைக்கு விநாடிக்கு 375 கனஅடி தண்ணீர் மட்டுமே வந்து கொண்டிருக்கிறது. காலை 8 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 44 அடியாக உள்ளது. அணையில் இருந்து கிழக்கு மற்றும் மேற்கு கரை கால்வாய் பாசனம் மூலம் பயன்பெறும் மக்களின் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

மேட்டூர் அணையின் நீர்மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், கடலூர் ஆகிய 12 மாவட்டங்களில் விவசாய தேவையையும், குடிநீர் தேவையையும் நிறைவேற்றி வந்தனர். மேட்டூர் அணை நீர்மட்டம் குறைந்து வருவதால் தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஆற்று நீரை நம்பி பயிரப்பட்டுள்ள நெற்பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது. குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சம்பா சாகுபடியை தொடங்க விவசாயிகள் யோசனை செய்து வருகின்றனர்.
அணையில் இருந்து சுரங்கப்பாதை வழியாக மின் உற்பத்திக்கு திறக்கப்படும் தண்ணீரும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது அணையில் உள்ள நீரை ஒரு சில மாதங்கள் மட்டுமே குடிநீருக்கு பயன்படுத்த முடியும். அதன் பிறகு நீர்மட்டம் சரிந்து விட்டால் சேலம் உள்பட 12 மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் எழுந்துள்ளது. கடந்த 4 ஆண்டு காலமாக மேட்டூர் அணையில் தண்ணீர் குறைவின்றி இருந்த நிலையில் பருவமழை ஏமாற்றியதால் நடப்பாண்டு விவசாயம், மின் உற்பத்தி பாதிக்கப்பட்டதோடு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் எழுந்துள்ளது.
-
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன்












Click it and Unblock the Notifications