"மின்னல் வேகத்தில் மீட்பு பணி! இரண்டே நாளில் மீண்டும் பழைய சென்னை!" அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் நம்பிக்கை
சென்னை: மிக்ஜாம் புயல் சென்னை நகரை மொத்தமாகப் புரட்டிப் போட்டுள்ள நிலையில், மீட்புப் பணிகள் குறித்து அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் விளக்கமளித்துள்ளார்.
வங்கக் கடல் பகுதியில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் காரணமாகச் சென்னையில் நேற்று முன்தினம் முதலே கனமழை கொட்டியது. நேற்று முன்தினம் இரவு ஆரம்பித்த மழை விடிய விடியக் கொட்டி தீர்த்தது.

இந்த கனமழை தலைநகர் சென்னையை மொத்தமாகப் புரட்டிப் போட்டது. பல மணி நேரம் வரை விடாமல் கனமழை கொட்டிய நிலையில், முக்கிய சாலைகளிலும் நீர் தேங்கியது.
மிக்ஜாம் புயல்: பொதுவாக மழை நீர் கடல் வழியாகச் சென்று ஆற்றில் கலக்கும். ஆனால், இந்த முறை கடல் சீற்றம் காரணமா கடல் வெள்ள நீர் உள்வாங்கவில்லை. இந்தச் சிக்கல் காரணமாக நீர் வடிவதில் தாமதம் ஏற்பட்டது. மிக்ஜாம் புயல் சென்னையில் இருந்து விலகிச் சென்றதும் நேற்றிரவு முதல் மழை சற்று குறைந்தது. இதையடுத்து உடனடியாக மீட்புப் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டது.
இப்போது நகரில் இருக்கும் பல முக்கிய சாலைகளில் மழை நீர் வடிந்துவிட்டது. மீட்புப் பணிகள் வேகமாக நடந்து வரும் நிலையில், இது தொடர்பாகப் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் விளக்கமளித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், சென்னையில் மழை பாதித்த பகுதிகளில் சீரமைப்பு பணிகளில் விரைவாக நடந்து வருகிறது. இன்று மாலைக்குள் அனைத்து இடங்களில் மழை நீரை வடிய வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மீட்புப் பணிகள்: மாலைக்குள் 75% இடங்களில் நீர் வெளியேற்றப்படும். மீட்புப் பணிகளில் கூடுதல் நபர்களை ஈடுபடுத்த உள்ளோம். அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இப்போது வரை 400+ முகாம்களில் 18230 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அதேபோல வீடுகளிலேயே தங்கியுள்ள 8 லட்சம் பேருக்கு உணவு வழங்கி வருகிறோம்.
நேற்றிரவு மழை நின்றுள்ளது. இதையடுத்து சென்னை மற்றும் அண்டைய மாவட்டங்களில் மீட்புப் பணிகள் படுவேகமாக நடந்து வருகிறது. சென்னையைப் பொறுத்த வரை வெளிவட்டங்களில் இருந்து சுமார் 5000 பேர் அழைத்துள்ளோம். இதனால் மீட்புப் பணிகள் வேகமாக நடக்கும். நீரை அகற்றும் பணிகள், கீழே விழுந்த மரங்களை அகற்றும் பணிகள் மிக வேகமாக நடந்து வருகிறது. இன்றிரவுக்குள் முடிந்தவரை நீரை அகற்றிவிடுவோம். மரங்களையும் நீக்கிவிடுவோம். மீதமுள்ள பணிகள் நாளை முடிக்கப்படும்.
பழைய சென்னை: மீண்டும் பழைய சென்னை என்ற சூழலை உருவாக்குவோம். சென்னையில் 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை பெய்துள்ளது. அதிலும் குறிப்பாக 2015ஐ காட்டிலும் அதிகளவில் மழை பெய்துள்ளது. முதல்வர் எடுத்த நடவடிக்கை காரணமாகவே இந்த மழையிலும் கூட பெரியளவில் பாதிப்பு ஏற்படவில்லை. மாநில பேரிடர் மீட்பு படை தயார் நிலையில் இருக்கிறது. தேவைப்படும் இடங்களுக்கு அவர்கள் அனுப்பி வைக்கப்படுவார்கள்.
அரசு தன்னால் முடிந்தவரை அனைத்து மீட்புப் பணிகளையும் மேற்கொண்டு வருகிறது.. சென்னையைச் சுற்றியுள்ள நீர் நிலைகளைப் பொறுத்தவரை அங்கிருந்து திறக்கப்படும் நீர் அளவு குறைந்துள்ளது. அங்குள்ள நிலைமையையும் உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம். தேவைக்கேற்ப நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அவர் தெரிவித்தார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications