நவம்பர் 13ல் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. அர்னாப், முரசு புயல் பாதிப்பே முடியலையே!

Subscribe to Oneindia Tamil

சென்னை: வங்கக்கடலில் அடுத்தடுத்து உருவான அர்னாப், முரசு புயல்களின் பாதிப்புகளே மோசமாக இருந்த நிலையில், அடுத்த காற்றழுத்த தாழ்வு பகுதி குறித்த விவரம் வெளியாகியுள்ளது. அதாவது வரும் நவம்பர் 13ஆம் தேதி மீண்டும் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதலே தமிழ்நாடு, ஆந்திரா பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக அர்னாப் மற்றும் முரசு என்று அடுத்தடுத்து புயல்கள் உருவான நிலையில், அது மோசமான பாதிப்பை ஏற்படுத்தியது.

New Low Pressure Area

புதிய காற்றழுத்த தாழ்வு

இதற்கிடையே அடுத்து வங்கக்கடலில் வரும் நவம்பர் 13ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஏற்கெனவே உருவாகியுள்ள மற்றொரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற்று, நவம்பர் 11ஆம் தேதி கடலூர் அருகே கரையைக் கடக்க வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மீண்டும் கனமழை பாதிப்பு ஏற்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நவம்பர் 13ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பு நவம்பர் 14, 15ஆம் தேதிகளில் வலுப்பெற்று, மேற்கு- வடமேற்கு திசையில் நகரக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

அடுத்து என்ன

இதற்கிடையே ஏற்கெனவே தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியுள்ளது. இது தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள நிலையில், அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளது. தொடர்ந்து நவம்பர் 11ஆம் தேதி மாலை கடலூர் அருகே கரையை கடக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக டெல்டா மாவட்டங்களின் 4 இடங்களில் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

அர்னாப் புயல்

வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதலே தமிழ்நாட்டில் மழை வெளுத்து வாங்கி வருகிறது.கடந்த அக்டோபர் இறுதியில் வங்கக்கடலில் உருவான அர்னாப் புயல், அக்டோபர் 28ஆம் தேதி ஆந்திர பிரதேச கடற்கரையை கடந்தது. அப்போது மணிக்கு 135 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசியதுடன், கனமழையும் கொட்டி தீர்த்தது. ஆந்திராவில் மரங்கள் சாய்ந்தது, மின்கம்பங்கள் விழுந்தது, வீடுகள் சேதமடைந்தது என பெரும் பாதிப்புகள் ஏற்பட்டன. புயல் தொடர்பான சம்பவங்களில் 7 பேர் உயிரிழந்தனர்.

முரசு முயல்

அர்னாப் புயலின் பாதிப்புகள் தொடர்ந்த நிலையில், அடுத்ததாக உருவான முரசு புயல் நவம்பர் 3ஆம் தேதி அதிகாலை தெற்கு ஆந்திர கடற்கரையை கடந்தது. மேலும், சென்னை காசிமேடு பகுதியைச் சேர்ந்த 9 மீனவர்கள் சென்ற விசைப்படகு கடலில் கவிழ்ந்தது. அக்டோபர் 29ஆம் தேதி சென்னையிலிருந்து மீன் பிடிக்க சென்ற அவர்கள், புயல் எச்சரிக்கையை தொடர்ந்து ஆந்திர கடற்கரை பகுதியில் படகை நிறுத்தியிருந்தனர். அப்போது நவம்பர் 3ஆம் தேதி பலத்த காற்று காரணமாக படகு கவிழ்ந்தது. அதில் இருந்த 9 மீனவர்களில் 4 பேரின் உடல்கள் இன்று கரை ஒதுங்கின. மாயமானவர்களை தேடும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது.

இப்படி அடுத்தடுத்த புயல்களால் ஆந்திரா மற்றும் தமிழக கடலோர பகுதிகள் பாதிப்புகளைச் சந்தித்துள்ளது. இந்த சூழலில் தான் மீண்டும் நவம்பர் 13ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+