வெளுத்து வாங்கும் மழை.. தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க முடியுமா? வெதர்மேன் சொன்ன அப்டேட்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. இந்நிலையில், தீபாவளிக்கு மழை இருக்குமா? என பலரும் கேள்வி எழுப்பியிக்கிறார்கள். இந்நிலையில் இது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் விளக்கமளித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது x பக்கத்தில் பதவிட்டிருப்பதாவது, "கிழக்கு திசையில் இருந்து காற்று தடையின்றி வீசுவதால், இன்னும் தமிழகத்தின் உட்புற மாவட்டங்களிலும்.. தெற்கு மாவட்டங்களிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

Deepavali rain

கடந்த இரண்டு நாட்களைப் போலவே, மிதமான மழையுடன் சில இடங்களில் பலத்த மழையும் பெய்யக்கூடும். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் உட்புற பகுதிகளில் திடீர் மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தை பொறுத்தவரை, இன்று காலை 8:30 மணி நிலவரப்படி.. கோயம்புத்தூர், வேலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, சேலம் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் உட்புற பகுதிகளில் நல்ல மழை பதிவாகி இருக்கிறது.

அதேபோல சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் சில பகுதிகளிலும்.. குறிப்பாக உட்புற பகுதிகளிலும் மிதமான மழையும், சில இடங்களில் பலத்த மழையும் பதிவாகி இருக்கிறது" என தமிழ்நாடு வெதர்மேன் பிரதேசம் தெரிவித்திருக்கிறார்.

முன்னதாக இன்று மதியம் வெளியாகியிருந்த வானிலை அறிவிப்பில், "08-11-2026: தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும்.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தேனி, தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களில் அநேக இடங்களிலும் புதுவையிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் அநேக இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்" என தெரிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+