அடுத்த ஆட்டம் ரெடி.. வங்க கடலில் அக்.22-ல் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு
சென்னை: வங்க கடலில் வரும் 22-ந் தேதி குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்தமான் கடலில் வரும் 20-ந் தேதி வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாவதைத் தொடர்ந்து இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்கிறது இந்திய வானிலை ஆய்வு மையம்.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதலே பெருமழை கொட்டித் தீர்த்து வருகிறது. வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து இன்று ஆந்திராவில் கரையைக் கடந்தது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பெருமழை கொட்டித் தீர்த்தது. இந்த மாவட்டங்களில் அதிகபட்சமாக 30 செ.மீ. மழையும் குறைந்தபட்சமாக 22 செமீ மழையும் பதிவாகி இருந்தது. இதனால் சென்னை மாநகரில் நேற்று முன்தினம் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்தது. ஆனால் தமிழ்நாடு அரசு மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் பொதுமக்கள் பெரும் பாதிப்பில் இருந்து தப்பித்திருந்தனர்.

இந்த நிலையில் வங்க கடலில் அந்தமான் பகுதியில் வரும் 20-ந் தேதி வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகிறது. இதனால் அக்டோபர் 22-ந் தேதி வங்க கடலில் புதியதாக காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகிறது. இது மேலும் வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறக் கூடிய வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
கோவை, நீலகிரியில்.. கன முதல் மிக கனமழை பெய்யும்! மொத்தம் 11 மாவட்டங்களுக்கு வார்னிங்! -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா












Click it and Unblock the Notifications