Red Alert: அதிகன மழை எச்சரிக்கை.. நீலகிரியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் இன்று அதி கன மழை பெய்வதற்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று ஒருநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா மையங்களும் இன்று ஒருநாள் மூடப்படுகின்றன. பொதுமக்களின் உதவிக்காக மழை, பேரிடர் பாதிப்பு குறித்து தகவல் தெரிவிக்க அவசர உதவிக்கான எண்களை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளன.
தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் தென்மேற்கு பருவ மழையின் தீவிரம் காரணமாக தமிழகத்தின் ஏராளமான பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், இன்றும், நாளையும் நீலகிரியில் கன மழை முதல் அதி கன மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், நீலகிரி மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கு மட்டும் இன்று (ஆகஸ்ட் 5) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி அனைத்து சுற்றுலாத் தலங்களும் இன்று மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களின் உதவிக்காக மழை, பேரிடர் பாதிப்பு குறித்து தகவல் தெரிவிக்க அவசர உதவிக்கான எண்களை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளன.
மழை, மண் சரிவு போன்ற இயற்கை இடர்பாடுகளால் பாதிக்கப்படும் பொதுமக்கள் உதவிக்கு அழைக்கும் வகையில் கட்டணமில்லா தொலைபேசி எண் 1077 மற்றும் 0423-2450034, 2450035 ஆகிய எண்களைத் தொடர்பு கொள்ளலாம். 94887-00588 என்ற வாட்ஸ் அப் எண்ணிலும் பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மழை பாதிப்புகளில் இருந்து பொதுமக்களைப் பாதுகாக்கும் வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரக்கோணத்தில் உள்ள தேசிய பேரிடர் மீட்பு படையில் இருந்து 30 வீரர்கள் நீலகிரி மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications