நீலகிரி மலையெல்லாம் மழை.. விடிய விடிய கொட்டி தீர்த்து.. இழுத்து மூடப்பட்ட ஊட்டி டூரிஸ்ட் ஸ்பாட்ஸ்
ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இன்று கன முதல் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்பதால் இன்றைய தினமும் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருப்பதாக வானிலை மையம் அறிவித்திருக்கிறது. அதற்கேற்றவாறு விடிய விடிய நீலகிரியில் பெய்த மழையால், மாவட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது..
நீலகிரி மாவட்டத்துக்கு 25 மற்றும் 26ம் தேதிகளில் அதாவது நேற்றும் இன்றும் ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.. இந்த ரெட் அலர்ட் நேற்று முன்தினமே வெளியான நிலையில், அனைத்துவிதமான ஆயத்த பணிகளுக்கும் நீலகிரி தயாரானது..

சுற்றுலா பயணிகள்
கனமழை காரணமாக சுற்றுலா பயணிகளுக்கும், உள்ளூர் மக்களுக்கும் முக்கிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.. ரெட் அலர்ட் என்பதால், மீட்பு படையினர் அனைத்து பகுதிகளிலும் தயார் நிலையில் இருந்தனர்.. தேவையின்றி யாரும் வெளியே வரவேண்டாம் என்றும் மாவட்ட மக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தனர்.
நேற்றைய தினமே அனைத்து சுற்றுலா தலங்களும் மூடும்படி அறிவிப்பு வெளியானது.. தொட்டபெட்டா காட்சி முனை, பைன்பாரஸ்ட், அவலாஞ்சி, பைக்காரா உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் மூடப்பட்டன.. இதனால் ஏற்கனவே நீலகிரிக்கு சுற்றுலா வந்தவர்கள், எங்குமே செல்ல முடியாமல் ரூமிலேயே அடைபட்டு கிடந்தனர்..
நீலகிரியில் தொடரும் மழை
நீலகிரியில் நேற்று முன்தினம் முதல் பல இடங்களில் கனமழை பெய்தது. நேற்று 2-வது நாளாக ஊட்டி உள்பட பல இடங்களிலும் பலத்த காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கியது.. இரவெல்லாம் கொட்டி தீர்த்த கனமழை, இன்று காலை வரையில் விடிய விடிய பெய்தது..
குறிப்பாக கூடலூர், பந்தலூர் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக அவலாஞ்சியில் 21 சென்டி மீட்டர் மழை பதிவாகியிருக்கிறது. இனறு திங்கட்கிழமையும், அதி கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியிருந்ததுடன், ரெட் அலர்ட் நீட்டிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா தலங்கள், ஊட்டி படகு இல்லம் இன்றைய தினமும் மூடப்பட்டுள்ளது.
மூடப்பட்ட சுற்றுலா தலங்கள்
பலத்த காற்று வீசுவதால் உதகை படகு இல்லம், பைக்காரா படகு இல்லம் ஆகியவை இன்றும் திறக்கப்படாது எனவும் தொட்டபெட்டா காட்சிமுனை, பைன் மரக்காடுகள், அவலாஞ்சி ஆகிய சுற்றுலாத் தலங்களுக்குச் செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு இன்றும் அனுமதி இல்லை என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. எனவே, ஊட்டி தாவரவியல் பூங்காவும், ரோஜா பூங்காவும் இன்றும் மூடப்பட்டிருக்கிறது.. அதேபோல கூடலூர் ஊசி மலைக் காட்சி முனைக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஊட்டியை அடுத்த 8-வது மைல் பகுதியில் மரம் முறிந்து விழுந்ததில் சுற்றுலா வந்த சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், அவனது உடல் சொந்த ஊருக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
மின்சாரம் பாதிப்பு
குன்னூர் கம்பி சோலை, கேத்தி, தலைக்குந்தா, தலையாட்டு மந்து, ஊட்டி படகு இல்லம் பகுதி, கோத்தகிரி உள்பட நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தீயணைப்பு துறையினர் உடனடியாக மரங்களை வெட்டி அகற்றி போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தி விடுகிறார்கள்.
பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதால் மாவட்டம் முழுவதும் கடுமையான குளிர் நிலவுகிறது. கடந்த 3 தினங்களாகவே பல்வேறு பகுதிகளில் மின்சாரம் தடைபட்டுள்ளது.. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.
ஊட்டியில் 6 இடங்களில் மரங்கள் விழுந்த நிலையில் உடனுக்குடன் மரங்கள் வெட்டி அகற்றப்பட்டன. மின்சாரம் தொடர்பான பாதிப்பு இருந்தால் 9498794987 என்ற எண்ணை தொடர்பு கொண்டு புகார் அளிக்க வேண்டும். அவசர கால உதவிக்கு 1077 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
-
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications