முடிவுக்கு வரும் வடகிழக்கு பருவமழை.. பொங்கலுக்கு மழை பெய்யுமா? வானிலை மையம் அப்டேட்
சென்னை: வடகிழக்கு பருவமழை அடுத்த இரு நாட்களில் தமிழகத்தில் இருந்து விலகும் சூழல் இருப்பதாகவும், பொங்கல் தினமான நாளை தமிழகத்தில் கிளைமேட் எப்படி இருக்கும் என வானிலை மையம் கூறியுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டியுள்ள இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், சென்னையில் அதிகாலையில் பனிமூட்டம் நிலவும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையால் மழை பெய்து வருகிறது. நெல்லை, கடலூர், தென்காசி, ராமநாதபுரம், சிவகங்கை, திருவாரூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நேற்று மழை பெய்தது. இந்நிலையில் வரும் நாட்களில் கிளைமேட் எப்படி இருக்கும் என்பது குறித்து வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

நாளை மழை பெய்யுமா?
வடகிழக்கு பருவமழை அடுத்த இரு தினங்களில் தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்னிந்திய பகுதிகளிலிருந்து விலகுவதற்கான வாய்ப்புள்ளது. கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று மற்றும் நாளை (அதாவது பொங்கல் தினத்தன்று) மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
வரும் 16 ஆம் தேதி முதல் 18 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். 19, 20 ஆம் தேதி தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
குறைந்தபட்ச வெப்பநிலை
24 மணி நேர குறைந்தபட்ச வெப்பநிலை மாறுதல்: 14-01-2026 முதல் 16-01-2026 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலையில் மாற்றதிற்கான வாய்ப்பு குறைவு. எனினும், ஓரிரு இடங்களில் சற்று குறைவாக இருக்கக்கூடும்.
இயல்பு நிலையிலிருந்து குறைந்தபட்ச வெப்ப அளவின் வேறுபாடு: 14-01-2026 முதல் 16-01-2026 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பாக இருக்கக்கூடும்.
சென்னையில் இன்றும் நாளையும்
சென்னையில் இன்று (14-01-2026): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31-32 செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21-22° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
சென்னையில் நாளை (15-01-2026): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31-32 செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21-22° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
14-01-2026 முதல் 18-01-2026 வரை: எச்சரிக்கை ஏதுமில்லை.
பதிவான மழை அளவு (செமீ):
* ஊத்து (திருநெல்வேலி) 9.
* நாலுமுக்கு (திருநெல்வேலி) 7. காக்காச்சி (திருநெல்வேலி) தலா 7,
* மாஞ்சோலை (திருநெல்வேலி) 5, இளையாங்குடி (சிவகங்கை) தலா 5,
* நாகுடி (புதுக்கோட்டை) 4,
* வேதாரண்யம் (நாகப்பட்டினம்), அடையாமடை (கன்னியாகுமரி). அறந்தாங்கி (புதுக்கோட்டை), பேராவூரணி (தஞ்சாவூர்), பில்லிமலை எஸ்டேட் (நீலகிரி). முள்ளங்கினாவிளை (கன்னியாகுமரி) தலா 3.
* காரைக்குடி (சிவகங்கை), தீர்த்தாண்டதானம் (ராமநாதபுரம்), ஆர்.எஸ்.மங்கலம் (ராமநாதபுரம்), ஆவுடையார்கோயில் (புதுக்கோட்டை), ஆயிங்குடி (புதுக்கோட்டை). கீழ்கோத்தகிரி எஸ்டேட் (நீலகிரி), கொடைக்கானல் படகு குழாம் (இண்டுக்கல்), பயணியர் விடுதி சிவகங்கை (சிவகங்கை), புதுக்கோட்டை (புதுக்கோட்டை), மானாமதுரை (சிவகங்கை), தேவகோட்டை (சிவகங்கை), பரமக்குடி (ராமநாதபுரம்). சிவகங்கை (சிவகங்கை), திருப்பத்தூர் (சிவகங்கை), திருப்புவனம் (சிவகங்கை), திருமயம் (புதுக்கோட்டை), மணமேல்குடி (புதுக்கோட்டை), சின்னக்கல்லார் (கோயம்புத்தூர்). தானியமங்கலம் (மதுரை), கிளானிலை (புதுக்கோட்டை), திருவாடானை (ராமநாதபுரம்), சிட்டம்பட்டி (மதுரை), மதுரை வடக்கு (மதுரை), மதுரை நகரம் (மதுரை) தலா 2 செமீ.
* திருவாரூர் (திருவாரூர்), நத்தம் (திண்டுக்கல்), கொடைக்கானல் (இண்டுக்கல்), அழகரை எஸ்டேட் (நீலகிரி), திருத்துறைப்பூண்டி (திருவாரூர்), மேலூர் ARG (மதுரை), திருக்குவளை (நாகப்பட்டினம்), தொண்டி (ராமநாதபுரம்), மிமிசல் (புதுக்கோட்டை), கின்னக்கோரை (நீலகிரி), தலைஞாயிறு (நாகப்பட்டினம்), கொத்தவாச்சேரி (கடலூர்), கோடியக்கரை (நாகப்பட்டினம்), திண்டுக்கல் (திண்டுக்கல்), அதிராமப்பட்டினம் (தஞ்சாவூர்), சேது பாஸ்கரா அக்ரி கல்லூரி AWS (சிவகங்கை), ஆலங்குடி (புதுக்கோட்டை), குறிஞ்சிப்பாடி (கடலூர்) தலா 1 செமீ மழை பெய்துள்ளது. என்று கூறப்பட்டுள்ளது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications