வடகிழக்கு பருவமழை எப்போது தொடங்க போகிறது! இந்த ஆண்டு மழை எப்படி இருக்கும்! வெதர்மேன் பிரத்யேக தகவல்
சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை எப்போது தொடங்கும் என்பது குறித்தும் இந்த ஆண்டு மழையின் தீவிரம் எப்படியிருக்கும் என்பது குறித்தும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான், ஒன் இந்தியாவுக்கு பிரத்யேக தகவல் அளித்துள்ளார்.
கேரளா, தமிழகத்தின் தென் மாவட்டங்கள், மகாராஷ்டிரா, கோவா உள்ளிட்ட பகுதிகளுக்கு பலனை கொடுக்கும் தென் மேற்கு பருவமழை ஜூலை மாதம் தொடங்கி கடந்த செப்டம்பர் மாதம் முடிவடைந்தது.

இந்த மழை விலகினால்தான் தமிழகம், புதுவை, தெற்கு ஆந்திரா பகுதிகளுக்கு பலனை அளிக்கும் வடகிழக்கு பருவமழை பெய்யும். அந்த வகையில் தற்போது தென்மேற்கு பருவமழையும் விலகிய நிலையில் வடகிழக்கு பருவமழை எப்போது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்த சீசனுக்காக சாதகமான சூழல் உருவாகினால், உடனே அந்த பருவமழை பெய்யத் தொடங்கிவிடும். எனினும் கீழக்கு, மேலடுக்கு சுழற்சி, வெப்பச் சலனம் உள்ளிட்ட காரணங்களால் தமிழகத்தில் கடந்த சில தினங்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. அது போல் மாலை 6 மணிக்கு மேல் குளிர்ச்சியான சூழலே நிலவுகிறது.
இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. கடந்த ஆண்டு வெள்ளம் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களை சூழ்ந்தது. கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்கு மேல் தண்ணீர் சூழ்ந்து கொண்டு மக்கள் வெளியேற முடியாத நிலையில் இருந்தது.
பிறகு மழை படிப்படியாக குறைந்ததும் தண்ணீர் வெளியேறியது. இந்த காலகட்டத்தில் மக்கள் மின்சாரம், தண்ணீர், உணவு இல்லாமல் அவதியடைந்தனர். இந்த அச்சத்திலேயே இந்த ஆண்டு மழை எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அந்த வகையில் இந்த ஆண்டு லாலினோ ஆண்டு என்பதால் மழை அதிகமாகவே இருக்கும் என்கிறார்கள்.
இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் ஒன் இந்தியாவுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு அதிகமாகவே இருக்கும். தற்போது இந்த சீசன் வரும் அக்டோபர் 13 ஆம் தேதி தொடங்கும் என அவர் தெரிவித்துள்ளார். சென்னை வானிலை மையமும் இந்த ஆண்டு 2 ஆவது வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என தெரிவித்திருந்தது. இந்த பருவமழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு தெரிவித்திருந்தது.
-
4 நாளைக்கு மழை தான்.. இன்னைக்கும் 14 மாவட்டங்களில் மழை பிச்சுக்கப் போகுது! ஐஎம்டி கொடுத்த அப்டேட்! -
இந்தியாவை பந்தாட வரும் பிரச்சனை.. எல் நினோ + ஹார்முஸ் நெருக்கடி.. RBI-க்கு தலை சுற்றுகிறது! -
இயற்கை அரக்கன்! இந்தியாவை தாக்கும் மான்ஸ்டர் எல் நினோ.. மாபெரும் பஞ்சம் ஏற்படுமாம்.. அதிர்ச்சி தகவல் -
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
பிரான்சில் மட்டும் 7 பேர் பலி.. 80 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஐரோப்பாவை வாட்டும் அதீத வெயில்! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம்












Click it and Unblock the Notifications