அடுத்த 3 மணி நேரம் சென்னைக்கு ஆரஞ்சு அலர்ட்.. கனமழை விட்டு விளாச போகுது! 22 மாவட்டங்களுக்கு அலர்ட்
சென்னை: தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் செங்கல்பட்டு மற்றும் சென்னைக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையை வானிலை மையம் விடுத்துள்ளது. மேலும் திருவள்ளூர், காஞ்சிபுரம், கோவை, சேலம், வேலூர், தூத்துக்குடி உள்பட 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.
தமிழகத்தில் கடந்த 3 நாட்களாக சென்னை மற்றும் கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்றைப் போலவே இன்றும் காலையிலேயே மழை பெய்ய தொடங்கியது. சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்தது.

வானிலை மையமும் காலையிலேயே மழை அறிவிப்பை வெளியிட்டு இருந்தது. இந்த நிலையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு சென்னைக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை அறிவிப்பினை வானிலை மையம் வெளியிட்டுள்ளது. இதேபோன்று தமிழகம் முழுக்க அடுத்த 3 மணி நேரத்தில் 22 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது.
வானிலை அறிவிப்பில், காலை 10 மணி வரை சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் கனமழை பெய்யக்கூடும். காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், திருவாரூர், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யும்.
இதேபோன்று அரியலூர், திண்டுக்கல், நீலகிரி, தூத்துக்குடி, திருவண்ணாமலை, நாமக்கல், பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம், வேலூர் மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.
-
சென்னையில் சம்பவம் இருக்கு.. ஹை அலர்ட் கொடுத்த வானிலை மையம்! உஷார் மக்களே! -
அடுத்த 3 மணி நேரம்.. விடாமல் கொட்டப் போகுது மழை.. செங்கல்பட்டு உள்பட 16 மாவட்டங்களுக்கு அலர்ட்! -
சென்னை முழுக்க மினி மால்.. அடி தூள்.. இனி வீட்டு பக்கத்திலேயே ஷாப்பிங், தியேட்டர், ஆபீஸ்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி












Click it and Unblock the Notifications