குமரிக் கடலில் வளிமண்டல காற்று சுழற்சி.. தென் மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழை எச்சரிக்கை! 10 செமீ கொட்டும்!
சென்னை: குமரிக் கடல் மற்றும் இலங்கையை ஒட்டியுள்ள பகுதிகளில் ஒரு வளிமண்டல காற்று சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தென் மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. நெல்லை, தென்காசி, குமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று 10 செமீட்டருக்கு மேல் மழை பதிவாகும் என வானிலை மையம் எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் நேற்று பல்வேறு இடங்களில் மழை பெய்தது. குறிப்பாக தென் மாவட்டங்களில் நேற்று அதிகாலை முதலே கனமழை வெளுத்து வாங்கியது. நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் நேற்று முழுக்க முழுக்க கனமழை கொட்டி தீர்த்தது. காலையில் ஆரம்பித்த மழை இரவு வரை தொடர்ந்தது.

குமரி கடல் பகுதியில்
இதனால் பல்வேறு இடங்களில் நீர்நிலைகளில் தண்ணீர் மட்டம் உயர்ந்தது. ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த சூழலில் இன்றும் தென் மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையை வானிலை மையம் வெளியிட்டுள்ளது. இது குறித்து வானிலை மையம் கூறியிருப்பதாவது:-
குமரிக் கடல் மற்றும் இலங்கையை ஒட்டியுள்ள பகுதிகளில் ஒரு வளிமண்டல காற்று சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தென் மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, குமரி ஆகிய 4 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. 10 செமீட்டருக்கு மேல் மழை பதிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று கனமழை பெய்யும் இடங்கள்
ராமநாதபுரம், விருதுநகர், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, அரியலூர், கடலூர், காரைக்காலில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நாளையும் தென் மாவட்டங்களில் மிக கனமழை தொடரும் என்றும் ராமநாதபுரம் உள்ளிட்ட வட மாவட்டங்களில் நாளையும் கனமழை தொடரும் என வானிலை மையம் கூறியுள்ளது.
இன்று நெல்லை, தென்காசி, குமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்டும், இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், மதுரை, அரியலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை. கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை கனமழை பெய்யும் இடங்கள்
நாளை, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என வானிலை மையம் கூறியிருந்தது.
மழை அளவு (செமீ)
* நாலுமுக்கு (திருநெல்வேலி) 26:
* ஊத்து (திருநெல்வேலி) 25;
* காக்காச்சி (திருநெல்வேலி) 23
* மாஞ்சோலை (திருநெல்வேலி) 21:
* திருச்செந்தூர் (தூத்துக்குடி), குலசேகரப்பட்டினம் (தூத்துக்குடி) தலா 13
* சுயத்தார் (தூத்துக்குடி) 11;
* காயல்பட்டினம் (தூத்துக்குடி) 10;
* சாத்தான்குளம் (தூத்துக்குடி), ஆயிக்குடி (தென்காசி), செங்கோட்டை (தென்காசி) தலா 9:
* பாபநாசம் (திருநெல்வேலி), பழைய தாலுகா அலுவலகம் ஸ்ரீலைகுண்டம் (தூத்துக்குடி) தலா 8 செமீ.
* அம்பாசமுத்திரம் (திருநெல்வேலி) கடம்பூர் (தூத்துக்குடி), திருச்செந்தூர் AWS (தூத்துக்குடி). குண்டாறு அணை (தென்காசி), கொத்தவாச்சேரி (கடலூர்), கடனா அணை (தென்காசி), சேரன்மகாதேவி (திருநெல்வேலி), DSCL கலயநல்லூர் (கள்ளக்குறிச்சி) தலா 7:
* சேர்வலாறு அணை (திருநெல்வேலி, தென்காசி (தென்காசி, பரங்கிப்பேட்டை (கடலூர். தூத்துக்குடி விமான நிலையம் ARG (தூத்துக்குடி, இரங்குடி (தூத்துக்குடி, தென்காசி AWS (தென்காசி, கள்ளக்குறிச்சி ARG (கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி (திருநெல்வேலி, சேத்தியாத்தோப்பு (கடலூர்) தலா 6 செமீ மழை பெய்துள்ளது. என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications