பிரசவ வலியில் துடித்த கர்ப்பிணி! பறந்து வந்த ஹெலிகாப்டர்! நெகிழ்ந்து போன ரயில் பயணிகள்
திருநெல்வேலி: தென் மாவட்டங்களில் வரலாறு காணாத மழை பெய்து வரும் நிலையில், திருச்செந்தூரிலிருந்து சென்னை நோக்கி வந்துக்கொண்டிருந்த ரயில் ஸ்ரீவைகுண்டத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த ரயிலிலிருந்த கர்ப்பிணி ஹெலிகாப்டர் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டிருக்கிறார்.
வளிமண்டல சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக தென் தமிழக மாவட்டங்களில் பரவலாக பெய்து வந்தது. இந்நிலையில் கடந்த 2 நாட்களில் இந்த மழை வேகமெடுத்தது. இதனால் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள நீர் நிலைகள் சட்டென நிரம்பின. மட்டுமல்லாது அதிலிருந்து வெளியேறிய உபரிநீர் ஊருக்குள் பாய்ந்திருக்கிறது. இதன் காரணமாக இந்த மாவட்டங்களின் பெரும்பாலான கிராமங்கள் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டிருக்கின்றன.

மின்சாரம், குடிநீர் இல்லாமல் மக்கள் தவித்து வருகின்றனர். கிராமப்புறங்களை விட நகர் பகுதிகள்தான் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கிறது. வழக்கமாக தீபாவளி, பொங்கல் பண்டிகை காலங்களில் பேருந்து கட்டணத்தை உயர்த்தும் தனியார் பேருந்து நிறுவனங்கள், இந்த மழை வெள்ளம் காரணமாக தென் மாவட்டங்களுக்கான பேருந்து போக்குவரத்தை ரத்து செய்திருக்கின்றன. எனவே சென்னையில் வசிக்கும் மக்கள் சொந்த ஊருக்கு சென்று, உறவினர்களின் நிலையை அறிந்துகொள்ள முடியாமல் தவிக்கின்றனர்.
மழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை தொடர்ந்து கண்காணிக்கவும், அப்பகுதிகளுக்கு சென்று நேரடி ஆய்வை மேற்கொள்ளவும் அமைச்சர்களுக்கும், ஐஏஎஸ் அதிகாரிகளுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். நேற்றைய நிலவரப்படி தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் 93.2 செமீ மழையும், ஸ்ரீவைகுண்டத்தில் 61.8 செமீ மழையும், திருச்செந்தூரில் 67.9 செமீ மழையும் பதிவாகியுள்ளது. இது முன்னெப்போதும் இல்லாத அளவு பெருமழையாகும். மழை வெள்ளத்தால் தூத்துக்குடி-திருச்செந்தூர் சாலையில் போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டிருக்கிறது.
ரயில் சேவையை பொறுத்த அளவில், சென்னை - திருச்செந்தூர் விரைவு ரயில், நெல்லை - திருச்செந்தூர் பயணிகள் ரயில், நெல்லை - சென்னை மற்றும் சென்னை - நெல்லை இடையேயான வந்தே பாரத் ரயில், திருச்செந்தூர் - பாலக்காடு, நெல்லையில் இருந்து ஜாம்நகர் செல்லும் ரயில், கன்னியாகுமரி செல்லும் நிஜாமுதீன் விரைவு ரயில் சேவை போன்றவை நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.
இதில் திருச்செந்தூரிலிருந்து சென்னை எழும்பூர் வரும் 'சென்னை - திருச்செந்தூர் விரைவு ரயில்', நேற்று முன்தினம் இரவு திருச்செந்தூரிலிருந்து திட்டமிட்டபடி புறப்பட்டிருக்கிறது. ஆனால் ரயில் லோகோ பைலட்டால் தண்டவாளத்தை சரியாக பார்க்க முடியவில்லை. எனவே ரயிலை ஸ்ரீவைகுண்டத்திலேயே நிறுத்தியிருக்கிறார். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டிருக்கிறது. ஏனெனில் ஸ்ரீவைகுண்டத்திற்கு அடுத்து உள்ள தாதன்குளத்தில், வெள்ளம் காரணமாக ரயில் தண்டவாளத்தின் அடி பாகம் முழுவதும் அரித்து சென்றிருக்கிறது. கொஞ்சம் மிஸ்ஸாகியிருந்தாலும், ரயில் பெரும் விபத்திற்கு உள்ளாகியிருக்கும்.
இந்த ரயிலில் 700க்கும் அதிகமானோர் சிக்கியிருந்த நிலையில் முதற்கட்டமாக 100 பேர் வரை மீட்கப்பட்டிருக்கின்றனர். ஆனால், அதன் பின்னர் ரயில் நிலையத்திற்கு செல்லும் சாலைகள் மழை வெள்ளத்தால் மூழ்கியதால் மீட்பு படையினரால், மேற்கொண்டு முன்னேர முடியவில்லை. இந்நிலையில், ஹெலிகாப்டர் மூலம் நேற்று அவர்களுக்கு உணவு விநியோகிக்கப்பட்டது. இந்த பயணிகளில் ஒரு நிறை மாத கர்ப்பிணி இருந்திருக்கிறார்.
அவருக்கு பிரசவலி ஏற்பட்டதையடுத்து இன்று ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டு, மதுரைக்கு கொண்டு வரப்பட்டிருக்கிறார். தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், நலமாக இருப்பதாகவும் அவரது உறவினர்கள் கூறியுள்ளனர். மீட்பு படையினரின் உடனடி உதவியால் பயணிகள் நெகிழ்ச்சியடைந்துள்ளனர்.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications