புதுவை பக்கம் போன காற்றழுத்தம்! சென்னையில் sunshine! துணி காயவைத்து எடுத்துடுங்க- வெதர்மேன் அப்டேட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் கனமழை பெய்திருந்த நிலையில் தற்போது மழை குறைந்து வெயில் வந்துள்ளது, எனவே துணிகளை காய வைத்துக் கொள்ளுங்கள் என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் தனது சமூகவலைதள பதிவில் கூறியிருப்பதாவது: வடதமிழக கடற்கரையோரம், உருவான குறைந்த காற்றழுத்த பகுதி, புதுச்சேரி அருகே நெருங்கியுள்ளதால், அது அரபிக் கடலில் உருவான காற்றழுத்தத்துடன் இணைந்து நிலத்தை நோக்கி வருகிறது. இதனால் தமிழகத்தில் பரவலாக மழை குறையும்.

weather rain tamil nadu

கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கூட மிக கனமழை பதிவாகியுள்ளது. அது போல் சென்னையிலும் நிறைய மழை பதிவாகியுள்ளது. இந்த குறைந்த காற்றழுத்தமானது 1 முதல் 2 நாட்களுக்கு கனமழையை கொடுத்தது.

சில இடங்களில் இன்று மழை விட்டு விட்டு பெய்யக் கூடும். ரெட் அலர்ட், ஆரஞ்சு அலர்ட்களை இந்திய வானிலை மையம்தான் அறிவித்தன. நான் எந்த இடத்திலும் சொல்லவில்லை. இன்று பிரகாசமான சூரிய ஒளியை என்ஜாய் செய்யுங்கள். துணிகளையும் காய வைத்துக் கொள்ளுங்கள்.

அடுத்து வரும் 25ஆம் தேதி ஒரு குறைந்த காற்றழுத்தம் உருவாகக் கூடும். இது வடதமிழக கடலோரத்தை நோக்கி நகரும். இதுகுறித்து மேலும் தகவல்கள், தற்போதுள்ள காற்றழுத்தம் விலகிச் சென்றால்தான் தெளிவாக தெரியவரும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அது போல் அவரது மற்றொரு பதிவில் குறைந்த காற்றழுத்த பகுதி பாண்டிச்சேரியை நோக்கி நகர்ந்துள்ளது. இது அரபிக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த பள்ளத்துடன் இன்று இணையும். இதனால் மழையை தரும் மேகக் கூட்டங்கள் கடலூர் அல்லது புதுச்சேரிக்கு செல்லும்.

டெல்டா மாவட்டங்களில் மழை குறையும். சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் குறிப்பாக திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டும் மழை விட்டுவிட்டு பெய்யும்.

வடசென்னை பகுதியில் நல்ல மழை பெய்துள்ளது. இந்த மழை அப்படியே மீஞ்சூர், பொன்னேரி, கும்மிடிப்பூண்டி பகுதிக்கு மாறக் கூடும். டெல்டா மாவட்டங்களான நாகை, திருவாரூர், தஞ்சை, புதுச்சேரி, கடலூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் மழை குறைந்துள்ளது. இந்த குறைந்த காற்றழுத்தத்தால் பள்ளிகளுக்கு இன்று ஒரு நாள் விடுமுறை கிடைத்ததற்கு மாணவர்கள் நன்றி சொல்லுங்கள். அடுத்த காற்றழுத்தம் குறித்து வரும் 25 ஆம் தேதி பார்க்கலாம் என குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தில் அண்மைக்காலமாக மழை பெய்து வருகிறது. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை மையம் கூறியிருப்பதாவது: தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக நீடிக்கிறது. தொடர்ந்து மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று பிற்பகலில் தென் மேற்கு மற்றும் அதனையொட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வட தமிழக, புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளுக்கு அப்பால் தாழ்வு மண்டலமாக வலுப்பெறக் கூடும்.

அதற்கடுத்து மேலும் மேற்கு-வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து, நாளை (வியாழக்கிழமை) வட தமிழகம், புதுச்சேரி, தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளுக்கு வந்து தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைய வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+