அடுத்த 3 மணி நேரம்.. சென்னை - குமரி வரை 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் அலர்ட்
சென்னை: தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரம் அதாவது இரவு 10 மணி வரை சென்னை, செங்கல்பட்டு, நெல்லை, குமரி, கடலூர் உள்பட 15 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த பேய் மழை சென்னை உள்பட 4 மாவட்டங்களை அப்படியே புரட்டிப்போட்டுவிட்டது. சென்னை முழுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், அதன் பிறகு எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் இப்போது தான் சென்னை மீண்டுள்ளது. டிசம்பர் 4ம் தேதிக்கு பிறகு சென்னையில் மழை பெய்யவில்லை. வறண்ட வானிலையே நிலவியது.

ஆனால் தென் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மழை பெய்து வந்தது. இந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கு பிறகு மீண்டும் இன்று சென்னையில் மழை பெய்தது. இதேபோல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்துள்ளது. இந்த நிலையில், இரவு 10 மணி வரை தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, நெல்லை, தூத்துக்குடி உள்பட 15 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரம் அதாவது இரவு 10 மணி வரை செங்கல்பட்டு, கடலூர், அரியலூர், தஞ்சாவூர், தூத்துக்குடி, கன்னியாக்குமரி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், "இன்று (டிச.15) தென் தமிழகத்தில் அநேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. என்று தெரிவித்து இருந்தது.
இதேபோல், நாளை டிச. 16ஆம் தேதி தென் தமிழகத்தில் அநேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இராமநாதபுரம், புதுக்கோட்டை, தூத்துக்குடி மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை, விருதுநகர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. என்று தெரிவித்து இருந்தது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications