விடிய விடிய விட்டு கொளுத்த போகுது மழை.. அடுத்த 3 மணி நேரம்.. தமிழகம் முழுக்க 29 மாவட்டங்களுக்கு பறந்த அலர்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 28 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திருப்பத்தூர், வேலூர், கடலூர் உள்பட 8 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக ஆரஞ்சு அலர்ட்டும், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தென்காசி உள்ளிட்ட 21 மாவட்டங்களில் இடி மிதமான மழைக்கும் வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

தமிழகத்தில் இன்று பகல் முழுவதும் வெயில் வாட்டி வதைத்தது. காலையில் இருந்தே வெயில் சுட்டெரித்த நிலையில் மாலையில் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்தது. மதிய நேரங்களில் வெயில் அனலாக தகித்தது. இன்று இரவும் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்தது.

rain-likely-in-29-districts-of-tamil-nadu-in-next-3-hours-orange-alert-for-8-districts

28 மாவட்டங்களுக்கு அலர்ட்

இந்த நிலையில் தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை முதல் தென்காசி வரை என 28 மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்காலில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இது தொடர்பான அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் நள்ளிரவு 1 மணி வரை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை ஆகிய 8 மாவட்டங்கள் மற்றும் புதுவையில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டுள்ளது.

லேசான மழைக்கு சான்ஸ்

இதேபோன்று நள்ளிரவு 1 மணி வரை திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சென்னை, சேலம், அரியலூர் ஆகிய 8 மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக மஞ்சள் நிற அலர்ட் விடப்பட்டுள்ளது.

இதேபோன்று நள்ளிரவு 1 மணி வரை தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம், நாமக்கல், கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி 12 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நாளை எங்கெல்லாம் மழைக்கு சான்ஸ்

சென்னை உள்பட 12 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கூறியுள்ளது. தமிழகத்தில் வெயில் அதிகரித்து வரும் சூழலில், செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ஈரோடு, தென்காசி, ராணிப்பேட்டை உள்பட 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக ஜில் அப்டேட்டை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாகவே வெயில் சுட்டெரித்து வருகிறது. நாளுக்கு நாள் வெயில் அதிகரித்து வருகிறது. வெளியில் சென்றாலே வியர்வையில் குளித்துவிடும் அளவுக்கு அனல் தகிக்கும் நிலையில் ஜில் அப்டேட் ஒன்றை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

அடுத்த 3 மணி நேரம்

அதாவது அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தில் சென்னை உள்பட 12 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் அதாவது இன்று இரவு 7 மணி வரை சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ஈரோடு, தென்காசி, ராணிப்பேட்டை , கோவை, திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை, கடலூர் ஆகிய 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று கூறியுள்ளது.

ஒரு வாரத்திற்கான அப்டேட்

முன்னதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அடுத்த ஒரு வாரத்திற்கான மழை அப்டேட்டில் கூறப்பட்டிருப்பதாவது:- மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று மற்றும் நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

வரும் 12 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஜூலை.15 மற்றும் 16 ஆம் தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையில் நாளை எப்படி?

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை நாளை (11-07-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

அசவுகரியம் ஏற்பட வாய்ப்பு

இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாட்டை பொறுத்தவரை, இன்று (ஜூலை.10) மற்றும் நாளை (ஜூலை.11) தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-4° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். இந்த தேதிகளில் அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும், குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட அதிகமாகவும் இருக்கும் நிலையில், தமிழகத்தில் ஓரிரு பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+