சென்னை உட்பட 3 மாவட்டங்களில் நள்ளிரவிலும் மழை வெளுக்கப்போகுது.. வானிலை மையம் மெசேஜ்!
சென்னை: தமிழகத்தில் 3 மாவட்டங்களில் நள்ளிரவு 1 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் தமிழகத்தில் 3 மாவட்டங்களில் நள்ளிரவு 1 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை, திருவள்ளூர், மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை தொடங்கும் ஜூலை மாதத்தில் இந்தியாவில் இயல்பை விட அதிகமாக மழை பெய்யும் என்றும், இது நீண்ட கால சராசரியில் 106% ஐ விட அதிகமாக இருக்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் அடுத்த மாதத்தில் இயல்பை விட அதிகமாக மழை பெய்யும் என்றாலும், வடகிழக்கு இந்தியாவின் சில பகுதிகள், கிழக்கு இந்தியாவின் பல பகுதிகள் மற்றும் தெற்கு தீபகற்பம் ஆகிய பகுதிகளில் சராசரியை விட குறைவாக மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், வடகிழக்கு, கிழக்கு மற்றும் தெற்கு தீபகற்பம் தவிர பெரும்பாலான பகுதிகளில் சராசரி வெப்பநிலை இயல்பானதாகவோ அல்லது இயல்பை விட குறைவாகவோ இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஜூன் மாதத்தின் முதல் பாதியில் சராசரியை விட 31% குறைவான மழைப்பொழிவு இருந்தபோதிலும், பருவமழை மீண்டும் தொடங்கியுள்ளதால் இந்த மாதம் இதுவரை பற்றாக்குறை 9% உபரியாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
சென்னை முழுக்க மினி மால்.. அடி தூள்.. இனி வீட்டு பக்கத்திலேயே ஷாப்பிங், தியேட்டர், ஆபீஸ்! -
ஏமாற்றம் கொடுத்த மேட்டூர்.. கைவிடாத மழை! டெல்டாவுக்கு இன்று கனமழை அலர்ட்! -
சென்னையில் இன்று மழை விடாது! இடி, மின்னலோடு கொட்ட போகுது! 9 மாவட்டங்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி












Click it and Unblock the Notifications