ருத்ரதாண்டவம் ஆடிய மழை.. மும்பையில் ஒரே நாளில் 20 செமீ மழை பதிவு.. கேரளாவில் இன்றும் ரெட் அலர்ட்
திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. வயநாடு, கோழிக்கோடு, கண்ணூர் மாவட்டங்களில் இன்று அதிகனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையும், மலப்புரம், திருச்சூர், காசர்கோடு மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.
மும்பையில் நேற்று தான் தென்மேற்கு பருவமழை தொடங்கிய நிலையில், அன்றைய தினம் ஒரு நாளில் 20 செமீ மழை பெய்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மகாராஷ்டிராவில் இன்று தானே, ராய்காட், ரத்னகிரி ஆகிய 3 மாவட்டங்களில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. தலைநகர் டெல்லி, மகாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் மழை தீவிரமடைந்து பெய்து வருகிறது. தமிழகம் ஆந்திரவை தவிர நாட்டின் பெரும்பாலானா மாநிலங்கள் தென்மேற்கு பருவமழையையே நம்பியுள்ளது.
கேரளாவில் 24 ஆம் தேதி பருவமழை தொடங்கிய நிலையில் அப்போதில் இருந்து கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. மும்பையில் நேற்று தான் தென் மேற்கு பருவமழை தொடங்கியது. ஆனால் தொடங்கிய முதல் நாளே மும்பையில் மட்டும் 20 செமீ மழை பதிவானது. மகாராஷ்டிராவின், மும்பை, தானே, ரத்னகிரி உள்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது.
மும்பையில் 107 ஆண்டுகளுக்கு பருவமழை தொடங்கியதும் இப்படி மழை பெய்துள்ளது. வழக்கமாக மகாராஷ்டிராவில் தென்மேற்கு பருவமழை ஜூன் 11 ஆம் தேதி தொடங்கும். ஆனால் சுமார் 75 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக இவ்வளவு சீக்கிரமாக தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. அதுமட்டுமின்றி தொடங்கிய முதல் நாளிலேயே மும்பை உள்பட மகாராஷ்டிராவின் பல்வேறு இடங்கள் வெள்ளத்தில் மூழ்கின. இதனால் மும்பையில் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்றும் மகாராஷ்டிராவில் 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், மகாராஷ்டிராவில் இன்று தானே, ராய்காட், ரத்னகிரி ஆகிய 3 மாவட்டங்களில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதேபோல் கேரளாவில் இன்று 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
கேரளாவில் வயநாடு, கோழிக்கோடு, கண்ணூர் மாவட்டங்களில் இன்று அதிகனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையும், மலப்புரம், திருச்சூர், காசர்கோடு மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது. தென் மேற்கு பருவமழை தொடங்கியதில் இருந்து கேரளாவில் மழை கொட்டி வருகிறது.
-
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications