லீவு அறிவிப்பு வந்தாச்சு! கொட்டும் கனமழை.. நாளை நான்கு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை
தென்காசி: கனமழை பெய்து வரும் நிலையில், நாளை தென்காசி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்த அம்மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். மேலும், கனமழை எச்சரிக்கை இருப்பதால் கல்வி நிறுவனங்கள் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்றும் ஆட்சியர்கள் எச்சரித்துள்ளனர். இதற்கிடையே இப்போது தேனியில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
நேற்று மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி, இன்று (13-12-2024) லட்சத்தீவு மாலத்தீவு பகுதிகளில் நிலவுகிறது.

இதன் காரணமாகத் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களிலும் கனமழை பெய்தது. குறிப்பாகத் தென்தமிழகத்தில் அநேக இடங்களிலும், வடதமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய நல்ல மழை பெய்தது.
நாளைய தினமும் தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதற்கிடையே தென்காசியில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். கனமழை எச்சரிக்கை இருப்பதால் கல்வி நிறுவனங்கள் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்பதையும் மாவட்ட ஆட்சியர் தனது உத்தரவில் தெளிவுபடுத்தியுள்ளார்.
அதேபோல நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களிலும் கனமழையால் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எந்தவொரு கல்வி நிறுவனமும் சிறப்பு வகுப்புகளை நாளை நடத்தக்கூடாது என்பதை மாவட்ட ஆட்சியர்கள் தங்கள் உத்தரவில் தெளிவுபடுத்தியுள்ளனர். மழை பாதிப்பு காரணமாகத் தேனியில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகள் சிறப்பு வகுப்புகளை நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதேநேரம் தேனியில் உள்ள கல்லூரிகள் வழக்கம் போல இயங்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
கத்திரி வெயில் முடிஞ்சுபோச்சு.. சென்னை உட்பட 5 மாவட்டங்களில் இன்று காலையிலேயே மழைக்கு வாய்ப்பு! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி












Click it and Unblock the Notifications