மேற்கு தொடர்ச்சி மலைகளில் கொட்டும் மழை! நீலகிரி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விட்டாச்சு லீவு!
ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் கனமழை கொட்டி வருவதால் இன்று அங்குள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவித்துள்ளார் ஆட்சியர் லட்சுமி பவ்யா. தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
நீலகிரி மாவட்டத்தில் ஏப்ரல், மே மாதங்களில் வரலாறு காணாத அளவிற்கு வெயில் வாட்டி எடுத்தது. இதனால் தேயிலை மகசூல் பாதிக்கப்பட்டது. இதனால் அனைத்து தரப்பினரும் பருவமழையை எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்த சூழலில் தென் மேற்கு பருவமழை எதிர்பார்த்தபடி ஜூன் மாதம் தொடங்கவில்லை.

ஜூன் மாதத்தில் அவ்வப்போது மட்டும் மழை பெய்த நிலையில் இந்த மாதம் 13 ஆம் தேதி தொடங்கிய பருவமழை தீவிரமடைந்தது. சுமார் 15 நாட்களாக பலத்த காற்றுடன் இடைவிடாமல் மழை பெய்தது. அதிலும் குறிப்பாக ஊட்டி, குன்னூர், குந்தா, கூடலூர், பந்தலூர், கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது.
இதனால் தேயிலை மகசூல் அதிகரிக்கப்பட்டுள்ளது. தேயிலை செடிகளில் பசுமையாக கொழுந்துகள் வளர்ந்துள்ளன. நல்ல மகசூல் ஈட்டும் நோக்கில் விவசாயிகள் தேயிலை செடிகளுக்கு உரமிட்டு பராமரித்தனர். ஊட்டி அருகே சோலூர், காத்தாடிமட்டம், மஞ்சூர் உள்ளிட்ட பல பகுதிகளிலும் உள்ள தேயிலை தோட்டங்கள் பசுமையாக காட்சியளிக்கின்றன.
மகசூல் அதிகரித்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த நிலையில் கடந்த சில தினங்களாக நீலகிரி மாவட்டத்தில் மழை பெய்து வருவதால் ஆங்காங்கே நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. மின் தடையும் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்றைய தினம் நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவித்து ஆட்சியர் லட்சுமி பவ்யா உத்தரவிட்டார்.
-
இன்னைக்கும் மழை விடாது.. 14 மாவட்டங்களில் வெளுக்க போகுது! சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை மையம் -
4 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலர்ட்.. விடாமல் வெளுக்க போகுது மழை.. வானிலை மையம் எச்சரிக்கை! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்?












Click it and Unblock the Notifications