கொட்டி தீர்க்கும் கனமழை! பாய்ந்தோடும் வெள்ளம்.. கன்னியாகுமரியில் பள்ளிகளுக்கு 2வது நாளாக விடுமுறை!
நாகர்கோவில்: தொடர் மழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று ஒருநாள் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் கூறியுள்ளார்.
தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றின் வேகமாறுபாடு காரணமாக மாநிலம் முழுவதும் பரவலாக கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் கடந்த 5 நாட்களாக தொடர் மழை பெய்து வருவதால் ஆங்காங்கே வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் குழித்துறை தாமிரபரணி ஆறு, வள்ளியாறு, பழையாறு ஆகிய ஆறுகளில் வெள்ளம் பாயத் தொடங்கியுள்ளது.

மலை கிராமங்களில் சில இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. அதேபோல சொக்ககிரி மலையில் திடீரென அருவி உருவாகியுள்ளது. மழை காரணமாக மீனவர்களும் மீன் பிடிக்க செல்லவில்லை. எனவே நேற்று பள்ளிகளுக்கு விடுமுறையை மாவட்ட ஆட்சியர் அறிவித்திருந்தார். காலாண்டு தேர்வு முடிந்த மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட இருந்த நிலையில் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், மழை இன்றும் தொடர்வதால் இரண்டாவது நாளாக இன்றும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவமழையை பொறுத்த அளவில் கடந்த 30ம் தேதியுடன் முடிவடைந்திருக்கிறது. இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் கூறுகையில், "கடந்த 4 மாதங்களில் நாடு முழுதும் சராசரியாக ஜூன் மாதத்தில் 91 சதவீதமும், ஜூலையில் 113 சதவீதமும், ஆகஸ்ட்டில், 64 சதவீதமும், செப்டம்பரில், 113 சதவீதமும் மழை பதிவாகி உள்ளது. கேரளா, தெற்கு கர்நாடகா, கிழக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் சராசரி அளவை விட, 18 சதவீதம் குறைவாக மழை பதிவாகி உள்ளது. மற்ற பகுதிகளில் சராசரி மழையும், வட மேற்கு மற்றும் மத்திய பகுதிகளில் கூடுதல் மழையும் பெய்துள்ளது" என்று கூறியுள்ளது.
அதேபோல இன்றும் நாளையும் தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications