எப்போதும் இல்லாத அளவு அனல் கக்கப்போகுது.. 3 மாதங்களுக்கு வெப்ப அலை வீசும்.. வானிலை மையம் வார்னிங்!
சென்னை: இந்த ஆண்டு கோடை வெயில் அனல் கக்கப்போகிறதாம். தமிழக வட மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் மார்ச் முதல் மே மாதம் வரை வெப்ப அலை அதிகரிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மார்ச் முதல் மே மாதம் வரையிலான வெப்பநிலை மற்றும் மழை தொடர்பான வானிலை கணிப்பை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, தென்கிழக்கு தீபகற்பத்தின் (வட தமிழ்நாடு, கடலோர தமிழ்நாடு) பல பகுதிகளிலும், வடமேற்கு மற்றும் மேற்கு மத்திய இந்தியாவின் சில பகுதிகளிலும் மார்ச் முதல் மே 2026 வரையிலான காலகட்டத்தில் இயல்பை விட அதிகமான வெப்ப அலை நாட்கள் இருக்க வாய்ப்புள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக அதிகபட்சமாக 15 நாட்கள் வரை வழக்கத்தை விட அதிகமான வெப்ப அலை நாட்கள் நிலவ வாய்ப்புள்ளது. எனவே இந்த காலகட்டத்தில் போதுமான நீரை அருந்த வேண்டும். அதிக வெயில் இருக்கும் நேரத்தில் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். வெப்ப அலையில் எளிதில் பாதிக்கப்படும் மக்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தி, அவர்களை பாதுகாக்க வேண்டும். எனக் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மழை வாய்ப்பு குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "குமரிக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. குமரிக்கடல் பகுதிகளிலிருந்து லட்சத்தீவு பகுதிகள் வரை ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக நாளையும் (மார்ச் 2), நாளை மறுதினமும் மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். 4 ஆம் தேதி தென் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களிலும், 5, 6 தேதிகளில் மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், 7 ஆம் தேதி தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழக உள் மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள், தமிழக கடலோர பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்றும், நாளையும் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
அடுத்த ரவுண்டு ஆரம்பம்.. வெயிலுக்கு பிரேக் தரும் மழை.. 2 ஆம் தேதி வரை கொளுத்த போகுது! வானிலை மையம் -
கோட்டையை தீர்மானிக்கும் வேடசந்தூர் ராசி! தமிழகத்தின் தீர்க்கதரிசி! எம்ஜிஆர் காலத்து சென்டிமென்ட்! -
ADMK Candidate list: 167 தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளர்கள் யார் யார்? முழு பட்டியல்! -
கொளத்தூரை விட்டுவிட்டு தொகுதி மாறிய ஆதிராஜாராம்! சேப்பாக்கத்தில் உதயநிதியை எதிர்த்து போட்டி -
74 வருட மர்ம சரித்திரம் தகர்கிறதா? திமுக ஜெயிச்சிடும் போல.. கடல் நகரத்தில் அதிமுக அசுர வேட்டை! சபாஷ் -
15 out of 16: சென்னை மாவட்டத்தில் எத்தனை தொகுதிகளில் திமுக போட்டி? சத்யராஜ் மகளுக்கு சீட் இல்லை! -
Summer Vacation: மாணவர்களுக்கு குட் நியூஸ்.. பள்ளிகளுக்கு 48 நாள் கோடை விடுமுறை! மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது? -
மொட்டை கடுதாசி கொடுத்த விஜய்.. பொன்ராஜ் மீதான புகார் கடிதத்தை பாருங்க! இதெல்லாம் வேலைக்கே ஆகாது! -
ஒரு பக்கம் கொளுத்தும் வெயில்.. இன்னொரு பக்கம் இடி, மின்னலுடன் மழை! தமிழகத்தின் நிலை இதுதான்! -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்!












Click it and Unblock the Notifications