செம்பரம்பாக்கம் ஏரி: 19 கண் மதகுகள் வழியாக 100 கன அடி உபரி நீர் திறப்பு- வெள்ள அபாய எச்சரிக்கை!
சென்னை: சென்னை மாநகருக்கு குடிநீர் வழங்கக் கூடிய செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பும் நிலையில் இன்று உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 100 கன அடி நீர் திறக்கப்பட்டிருப்பதால் அடையாறு ஆற்றங்கரையோர மக்களுக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 24 அடி; 3,645 மில்லியன் கனடி. இதன் மொத்த பரப்பளவு 25.51 சதுர கிமீ.

செம்பரம்பாக்கம் நீர் அளவு: செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து கிடுகிடுவென அதிகரித்தது. இதனையடுத்து செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் மட்டம் தற்போது 22 அடியாக உயர்ந்தது. அதாவது மொத்தம் 3,110 மில்லியன் கன அடிநீர் தற்போது செம்பரம்பாக்கம் ஏரியில் நிரம்பி நிற்கிறது. செம்பரம்பாக்கம் ஏரிக்கான நீர்வரத்து என்பது வினாடிக்கு 231 கன அடியாக இருக்கிறது.
செம்பரம்பாக்கம் ஏரி நீர் திறப்பு: இதனைத் தொடர்ந்து செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வினாடிக்கு 100 கன அடி நீர் இன்று மாலை திறந்துவிடப்பட்டது. அமைச்சர் தா.மோ. அன்பரசன், ஆட்சியர் கலைச்செல்வி மோகன் முன்னிலையில் 10 கண் மதகுகள் வழியாக செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் திறந்துவிடப்பட்டது செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் உபரி நீரானது அடையாறு ஆற்றின் வழியாக சென்னை மாநகருக்குள் நுழைந்து வங்க கடலில் கலக்கும்.
முதல் கட்ட எச்சரிக்கை: இதனையடுத்து அடையாறு ஆற்றின் கரையோர மக்களுக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குன்றத்தூர், திருநீர்மலை,, அனகாபுத்தூர் உள்ளிட்ட அடையாறு ஆற்றங்கரையோர மக்களுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மறக்க முடியுமா?: 2015-ம் ஆண்டு டிசம்பர் 1-ந் தேதி முன்னறிவிப்பின்றி செம்பரம்பாக்கம் ஏரி உபரி நீர் பெருமளவு திறக்கப்பட்டது. இதனால் அடையாறு ஆற்றங்கரையோர பகுதிகள் மட்டும தென்சென்னை மாநகரமும் பெருவெள்ளத்தில் மூழ்கியது. அப்பெருவெள்ளத்தில் ஏராளமானோர் உயிரிழந்து பெரும் அழிவும் ஏற்பட்டது. இதனால் சென்னை மாநகர மக்களுக்கு 'செம்பரம்பாக்கம்' ஏரி நீர் திறப்பு என்றாலே 2015 துயரம் நினைவில் வந்து போவது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. இதனையடுத்தே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முழுவீச்சில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications