வங்கக்கடல் ஓய்ந்தது.. மழைநீர் வடிகிறது.. போர்க்கால நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு தர வேண்டும்: தமிழக அரசு
சென்னை: தமிழக அரசு எடுத்து வரும் போர்க்கால நடவடிக்கைகளுக்கு, பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது...
வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்து மிக்ஜாம் என்ற புயலாக ஆந்திராவை நோக்கி நகர்ந்து வந்தது... அது சென்னைக்கு நேராக, சுமார் 90 கிலோ மீட்டரில் வெகுநேரம் நிலை நின்றது. இதன் காரணமாக, சென்னையில் நேற்று முன்தினம் தொடங்கி இன்று அதிகாலை வரை இடைவிடாமல் மிக கனமழை பெய்தது.

இந்த நிலையில் சென்னையை விட்டு புயல் ஆந்திராவை நோக்கி நகர்ந்து விட்டது. இதனால், சென்னையில் மழை அளவு மெல்ல மெல்ல குறைந்து வருகிறது...
எனவே, இன்று காலையிலிருந்தே பல பகுதிகளிலும் மழை ஓரளவு குறைந்து காணப்படுகிறது.. இதன்காரணமாக, மெல்ல மெல்ல வெள்ளமும் வடியத்தொடங்கியுள்ளது. அண்ணா சாலை, வள்ளுவர் கோட்டம் ஆகிய பகுதிகளில் வெள்ளம் முழுமையாகவே வடிந்துவிட்டது.
செங்கல்பட்டு: இன்று முழுவதும் மழை இல்லாமல் இருந்தால் பெரும்பாலான பகுதிகளில் மழை நீர் முழுவதுமாக வடிவதற்கு வாய்ப்புகள் உள்ளது. இன்றும் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டு இருப்பதால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில், அரசு எடுத்து வரும் போர்க்கால நடவடிக்கைகளுக்கு, பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது... இதுகுறித்து தமிழக அரசு செய்தி குறிப்பை ஒன்றை வெளியிட்டுள்ளது.
சென்னை கனமழை: சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில், வரலாறு காணாத கனமழை பொழிந்து வருகிறது. அடையாறு மற்றும் கூவம் ஆறுகளில், அதிக அளவில் வெள்ள நீர் செல்வதால், ஆறுகளை ஒட்டிய கரையோர பகுதிகளில், மழை நீர் இன்னும் வடியாமல் இருக்கிறது. இந்நிலையில், ஆறுகளை ஒட்டிய கரையோர பகுதிகளில் வாழ்ந்து வரும் மக்களை, பாதுகாப்பான பாதுகாப்பான பகுதிக்கு அழைத்து செல்ல, அரசு போர்க்கால நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
பொதுமக்களின் பாதுகாப்பு கருதி, சென்னை மாநகராட்சி, வருவாய் துறை, காவல் துறை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட நிர்வாகங்கள் எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பையும் நல்கி, பாதுகாப்பான இடங்களுக்கு பொதுமக்கள் செல்ல வேண்டும். முகாம்களில் மக்கள் சிரமமின்றி தங்க வசதியாக, உணவு, உறைவிடம், மருத்துவ வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை, அரசு சிறப்பாக ஏற்பாடு செய்துள்ளது.
மீட்பு பணிகள்: மீட்பு பணிகள் மற்றும் பிற உதவிகளுக்கு என, 24 மணி நேரமும் செயல்படும், கட்டணம் இல்லா தொலைபேசி எண்கள், 1913, சென்னை மாநகராட்சிக்கு, 2561 9206, 207, 208; தாம்பரம் மாநகராட்சிக்கு 1800 425 4355, 1800 425 1600; ஆவடி மாநகராட்சிக்கு 1800 425 5109 ஆகியவற்றை தொடர்பு கொள்ளவும்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது..
-
சர்க்கரை அட்டை உங்களிடம் இருக்கா? சென்னை மக்களுக்கு ஒரே நாளில் பெயர் மாற்றத் தீர்வு தரும் தமிழக அரசு -
வரலாறு படைக்கும் Zoho.. டேட்டா சென்டர்களுக்கு உதவ புது சர்வர் உருவாக்கிய சென்னை நிறுவனம்! -
பெங்களூருக்கு வேட்டு! இந்தியாவிலேயே அதிக சம்பள உயர்வு கிடைக்கும் நகரம் எது தெரியுமா? -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
சென்னை ஃபுல்லா மாறப் போகுது.. போக்குவரத்து நெரிசலுக்கு பெரும் தீர்வு! ஐடிஎஸ்-ஐ கையிலெடுத்த ஆபீசர்ஸ் -
இதுதான் மாற்றமா? சென்னை அரசு மருத்துவமனையில்.. இளம்பெண்ணுக்கு நடந்த சோகம்! மக்கள் ஷாக் -
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி












Click it and Unblock the Notifications