போடு வெடிய..அடுத்த 3 மணி நேரம் 20 மாவட்டங்களில் மழை கொட்ட போகுது! தமிழகத்தின் வெப்பம் குறைய போகுது!
சென்னை: தமிழ்நாட்டில் ஒவ்வொரு நாளும் பல்வேறு பகுதிகளிலும் கோடை வெப்பம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகிறார்கள். அதேநேரம் கோடை வெப்பத்தைக் குறைக்கும் வகையில் ஆங்காங்கே மழையும் பெய்து வருகிறது. இதற்கிடையே அடுத்த 3 மணி நேரத்தில் மேற்கு தமிழகம் மற்றும் தென்தமிழகத்தில் உள்ள 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கோடைக் காலம் ஆரம்பித்துவிட்ட நிலையில், பல பகுதிகளில் வெப்பம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மாநிலத்தில் பல இடங்களில் வெப்பம் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டிப் பதிவாவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகிறார்கள். மதிய நேரங்களில் வெளியே கூட செல்ல முடியாத நிலைதான் இருக்கிறது.

20 மாவட்டங்களில் மழை
அதேநேரம் கடந்த சில வாரங்களாகவே மாநிலத்தில் ஆங்காங்கே மழையும் பெய்து வருகிறது. இது கோடை வெப்பத்தைக் கொஞ்சம் குளிர்விக்கும் வகையில் இருக்கிறது. இதற்கிடையே அடுத்த 3 மணி நேரத்தில் 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அதாவது இரவு 7 மணி வரை திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, மயிலாடுதுறை, தஞ்சை, நாகப்பட்டினம், திருவாரூர், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
எங்கெல்லாம் மழை
மேலும் விருதுநகர், நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் சாலைகளில் நீர் தேங்கவும் டிராபிக் பாதிப்பும் ஏற்படவும் வாய்ப்பு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் கடந்த சில நாட்களாகவே மேற்கு மாவட்டங்களில் வெப்பம் அதிகரித்து வந்த நிலையில், இந்த மழை வெப்பத்தைச் சற்று குறைக்கும்.
வெப்பத்தை குளிர்விக்கும்
நேற்றைய தினம் தமிழகத்தில் அதிகபட்சமாக ஈரோடு, கரூர், மதுரை ஏர்போர்ட்டில் 102.2°F வெப்பம் பதிவாகி இருந்தது. அதேபோல திருச்சியில் 102.2°F வெப்பம் பதிவாகி இருந்த நிலையில், வேலூரில் 101.48°F, சேலத்தில் 101.3°F மற்றும் அரியலூரில் 100.4°F வெப்பம் பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
வானிலை மையம்
முன்னதாக சென்னை வானிலை மையம் வெளியிட்டிருந்த செய்திக்குறிப்பில், "தென்தமிழகக் கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டலக் கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்னிந்தியப் பகுதிகளின் மேல், வளிமண்டலக் கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்குத் திசைக் காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதனால் இன்று தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை இன்று (23-04-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். நாளை (24-04-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications