‛காலை 10 மணி வரை வார்னிங்’.. தமிழகத்தில் இந்த 3 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை.. வானிலை ‛அலர்ட்’

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் இன்று காலை 10 மணி வரை 3 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பொதுவாக மே மாதத்தில் வெயில் வெளுத்து வாங்கும். ஆனால் இந்த முறை மே மாதம் என்பது முற்றிலும் மாறுபட்டு காணப்படுகிறது. அதாவது தொடர்ந்து கோடை மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான காலநிலை நிலவி வருகிறது.

Tamil Nadu these 3 district will get rain with thunderstorm up to 10 AM on today

இதற்கிடையே தான் வடதமிழக-தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நேற்று காலை 5.30 மணியளவில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.

இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானத வடகிழக்கு திசையில் நகர்ந்து, நாளை காலை, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, மத்திய வங்கக்கடல் பகுதியில் நிலவும். பிறகு மேலும் வலுப்பெற்று வடகிழக்கு திசையில் நகர்ந்து வடகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் 25ம் தேதி மாலை நிலவ உள்ளது.

இந்நிலையில் தான் வடதமிழக-தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நேற்று காலை 5.30 மணியளவில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் பல மாவட்டங்களில் இன்று மழை பெய்து வருகிறது. குறிப்பாக தேனி, தென்கசி, நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே தான் அடுத்த 3 மணிநேரத்துக்கான வானிலை எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‛‛தமிழகத்தில் காலை 10 மணி வரை 3 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. அதன்படி நாகை, கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யலாம்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த மழையின் காரணமாக 3 மாவட்டங்களின் சில இடங்களில் மழைநீர் தேங்கலாம். சில இடங்களில் போக்குவரத்து பாதிப்பு உள்ளிட்ட சிறிய வகையிலான பாதிப்புகள் ஏற்படலாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+