ரெடியா இருங்க.. இன்று தமிழ்நாட்டில் பொளந்து கட்ட போகுது.. திரண்டு வரும் மழை.. வானிலை மையம் வார்னிங்
சென்னை: தமிழ்நாடு மற்றும் குமரிக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் காரணமாக, இன்று பல்வேறு பகுதிகளில் மழை பெய்ய உள்ளது.
இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள கணிப்பில். 01.09.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள், நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல். தென்காசி, சேலம், திருச்சிராப்பள்ளி, நாமக்கல், கரூர், தர்மபுரி, திருப்பத்தூர். திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

02.09.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கள்ளக்குறிச்சி, வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
03.09.2023 முதல் 07.09.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): தர்மபுரி PTO, தம்மம்பட்டி (சேலம்), கொயெடி {ஈரோடு), சேலம் தலா 9. ஏடியியான்மலை (புதுக்கோட்டை), கோழிப்போர்விளை (கன்னியாகுமரி), தக்கலை (கன்னியாகுமரி) தலா 7. மருங்காபுரி (திருச்சி), தென்பரநாடு (திருச்சி), திண்டிவனம் (விழுப்புரம்), தர்மபுரி, வாத்தளை அணைக்கட்டு (திருச்சி), அடையாமடை (கன்னியாகுமரி), பஞ்சப்பட்டி (கரூர்) தலா 6, கீழ் கோத்தகிரி எஸ்டேட் (நீலகிரி), குமாரபாளையம் (நாமக்கல்), ஆனைமடுவு அணை (சேலம்), நம்பியூர் (ஈரோடு), ராசிபுரம் (நாமக்கல்) பொன்னமராவதி (புதுக்கோட்டை), பாப்பாரப்பட்டி KVK AW5, மணப்பாறை (திருச்சி), கீரனூர் (புதுக்கோட்டை), சங்கரிதுர்கம் (சேலம்), துறையூர் (திருச்சி), ஊத்து (இருநெல்வேலி) தலா 5, மாம்பழத்துறையாறு (கன்னியாகுமரி), புடலூர் (தஞ்சாவூர்), திருமங்கலம் (மதுரை), கந்தர்வகோட்டை (புதுக்கோட்டை). கெலவரப்பள்ளி அணை (கிருஷ்ணகிரி), KRP அணை (கிருஷ்ணகிரி), அணைகெடங்கு (கன்னியாகுமரி), காக்காச்சி (திருநெல்வேலி).
திருக்கழுகுன்றம் (செங்கல்பட்டு) கடம்பூர் (தூத்துக்குடி). கலசப்பாக்கம் (திருவண்ணாமலை). திருச்சி விமான நிலையம், புதுச்சேரி ஹனர் (தருமபுரி). திருக்காட்டுப்பள்ளி (தஞ்சாவூர்), ஆலங்காயம் (திருப்பத்தூர்) வேடசந்தூர் (திண்டுக்கல்) தலா 4. புகையிலை நிலையம் (திண்டுக்கல்), கோவில்பட்டி (திருச்சி), மைலம்பட்டி (கரூர்), நாமக்கல் கலெக்டர் அலுவலகம், காரையூர் (புதுக்கோட்டை), கிருஷ்ணகிரி, பண்ருட்டி (கடலூர்), ஈரோடு, RSCL-2 கேதார் (விழுப்புரம்), பவானி (ஈரோடு), மன்னார்குடி (திருவாரூர்), மதுராந்தகம் (செங்கல்பட்டு), மூலனூர் (திருப்பூர்), குழித்துறை (கன்னியாகுமரி), அவலாஞ்சி (நீலகிரி), தண்டராம்பேட்டை (திருவண்ணாமலை), விருதுநகர், சின்னக்கல்லார் (கோயம்புத்தூர் எறையூர் (பெரம்பதூர்), பெருந்துறை (ஈரோ), ஐந்தா பாலம் (நீலகிரி), அன்னூர் (கோயம்புத்தூர்), செய்யூர் (செங்கல்பட்டு), வல்லம் (தஞ்சாவூர்), நாவலூர் கோட்டப்பட்டு (திருச்சி). திருவண்ணாமலை, நந்தியார் (திருச்சி) சோலையார் (கோயம்புத்தூர்), பொன்னனியார் அணை (திருச்சி), சாம்ராஜ் எஸ்டேட் (நீலகிரி) தலா 3, புதுச்சத்திரம் (நாமக்கல்) வாணியம்பாடி (திருப்பத்தூர்), பழனி (திண்டுக்கல்) ஆம்பூர் (திருப்பத்தூர்), RSCL-3 செம்மேடு (விழுப்புரம்), கரூர் பரமத்தி (கரூர்) நாகர்கோவில் (கன்னியாகுமரி) செங்கல்பட்டு, அரவக்குறிச்சி (களூர்). காட்டுமன்னார் கோயில் (கடலூர்), அழகரை எஸ்டேட் (நீலகிரி). மங்களபுரம் (நாமக்கல்). ஓகேனக்கல் (தருமபுரி), இலுப்பூர் (புதுக்கோட்டை), கங்கவல்லி (சேலம்), அரண்மனைப்புதூர் (தேனி), தஞ்சாவூர் PTO, மோகனூர் (நாமக்கல்), சின்னார் அணை (கிருஷ்ணகிரி) கோத்தகிரி (நீலகிரி), தேன்கனிக்கோட்டை (கிருஷ்ணகிரி), கும்பகோணம் (தஞ்சாவூர்), களகிரி (கிருஷ்ணகிரி), பேரையூர் (மதுரை), சிறுகமணி KVK AWS (திருச்சி), எட்டயபுரம் (தூத்துக்குடி). தஞ்சை பாபநாசம். நாலுமுக்கு (திருநெல்வேலி), சந்தியூர் KVK AWS (சேலம்). தமுதலை (பெரம்பலூர்), தோகமலை (கரூர்), திருச்செங்கோடு (நாமக்கல்), மணம்பூண்டி (விழுப்புரம்), ஏற்காடு (சேலம்). வாழப்பாடி (சேலம்), ஸ்ரீவில்லிபுத்தூர் (விதுைநகர்), வால்பாறை PTO (கோயம்புத்தூர்), குடியாத்தம் (வேதூர்), ஓடன்சத்திரம் (இண்டுக்கல்), குளித்தலை (கரூர்), கயத்தாறு (தூத்துக்குடி), மாஞ்சோலை (திருநெல்வேலி), முகையூர் (விழுப்புரம்), திருப்பதிசாரம் AWS (கன்னியாகுமரி), உதகமண்டலம் (நீலகிரி), ஒகர் (கிருஷ்ணகிரி) விராலிமலை (புதுக்கோட்டை), களக்காடு (திருநெல்வேலி) தலா 2, கல்லக்குடி (திருச்சி). மாயனூர் (கரூர்), புலிவலம் (திருச்சி), சேட்பேட்டை {திருவண்ணாமலை). வடபுதுப்பட்டு (திருப்பத்தூர்), நன்னிலம் (திருவாளர்), கொரட்டூர் (திருவள்ளூர்), போளூர் (திருவண்ணாமலை), மேட்டுப்பாளையம் (கோயம்புத்தூர்), வாதூர் (விழுப்புரம்), வாலாஜா (ராணிப்பேட்டை), பொன்மலை (திருச்சி), மேலாளத்தூர் (வேலூர்), கொமெடியாறு அணை (திருநெல்வேலி), பெரம்பலூர், கிளச்செருவை (கடலூர்), வால்பாறை PAP (கோயம்புத்தூர்), ஆரணி (திருவண்ணாமலை), வரட்டுப்பள்ளம் (ஈரோடு), கடவூர் (கரூர்) பாலக்கோடு (தருமபுரி).சண்முகநதி (தேனி), பொன்னை அணை (வேலூர்), RSCL-3 ஆனந்தபுரம் (விழுப்புரம்), எருமபட்டி (நாமக்கல்), பாம்பார் அணை (கிருஷ்ணகிரி), பில்லிமலை எஸ்டேட் (நீலகிரி) KVK காட்டுக்குப்பம் ARG (காஞ்சிபுரம்), தத்தியெங்கர்பேட்டை (திருச்சி), பாளையங்கோட்டை (திருநெல்வேலி), ஊத்தங்கரை (ருெஷ்ணகிரி), பாலமோர் (கன்னியாமைரி}, காமாட்சிபுரம் (திண்டுக்கல்), கோபிசெட்டிபாளையம் (ஈரோ), துவாக்குடி (திருச்சி), கிருஷ்ணராயபுரம் (கரூர்), வீரகனூர் (சேலம்), மேல் பவானி (நீலகிரி), பெரியார் (தேனி), மேட்டுப்பட்டி (மதுரை), பாலவிதிதி (கரூர்), புள்ளம்பாடி (திருச்சி), திருவையாறு (தஞ்சாவூர்), கெத்தண்டப்பட்டி (திருப்பத்தார்). RSCL-2 சூரப்பட்டு (விழுப்புரம்), திண்டுக்கல். தேக்கடி (தேனி) தலா 1.
மீனவர்களுக்கான எச்சரிக்கை: தமிழக கடலோரப்பகுதிகள் 01.09.2023 முதல் 04.09.2023 வரை: தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

வங்கக்கடல் பகுதிகள்:
02.09.2023: தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
03.09.2023: இலங்கை கடலோரப்பகுதிகள் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
04.09.2023 & 05.09.2023: இலங்கை கடலோரப்பகுதிகள் மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள்.
மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள்.












Click it and Unblock the Notifications