விடிவுகாலம்.. வெயில் எடுக்க போகும் நீண்ட பிரேக்.. தமிழ்நாட்டில் தணியும் வெப்பம்.. வானிலை மையம்
சென்னை: தமிழ்நாட்டில் இன்று முதல் வெப்பம் படிப்படியாக குறையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் மேக மூட்டமான் வானிலை நிலவும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் இது தொடர்பாக வெளியிட்ட அறிவிப்பில், 10.05 2024 முதல் 12.05.2024 வரை காற்றின் ஈரப்பதம் தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் பிற்பகலில் 40-55% ஆகவும், மற்ற நேரங்களில் 50-85% ஆகவும் மற்றும் கடலோரப்பகுதிகளில் 55-85% ஆகவும் இருக்கக்கூடும்.

வெப்ப அலை பற்றிய முன்னெச்சரிக்கை:
10.05.2024: தமிழக உள் மாவட்டங்களில் சரி இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்.
11.05.2024 மற்றும் 12.05.2024 வரை அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் உரிய இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம். ஆனால் வெப்ப அலை ஏற்படாது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸை ஓட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸை ஓட்டியும் இசைக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் உளசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸை ஓட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
10.05.2024: குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மன்னார் வளைகுடா பகுதிகளில் சுறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக் செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள்.
மழை சென்னை; சென்னையில் பல்வேறு இடங்களில் அதிகாலையில் நல்ல மழை பெய்துள்ளது.
கடந்த ஒன்றரை மாத வெயிலுக்கு இடையில் திடீரென அதிகாலையில் மழை பெய்துள்ளது. தெற்கு சென்னை, மத்திய சென்னை பகுதிகளில் சில இடங்களில் கனமழை பெய்தது. தென் சென்னையில் சில பகுதிகளில் சாரல் மழை பெய்து வருகிறது.
இன்று அதிகாலை கிண்டி கோட்டம் கிண்டி, மயிலாப்பூர், வேளச்சேரி, தாம்பரம், ஆலந்தூர் மற்றும் சோழிங்கநல்லூர் தாலுகாக்களை உள்ளடக்கிய பகுதிகளில் மழை பெய்தது. அதிகாலை 3 மணி அளவில் சென்னையில் மழை தொடங்கியது.
5 - 6 மணி வரை மழை விடாமல் நீடித்தது. 6 மணி தாண்டியும் சில இடங்களில் சாரல் மழை பெய்தது. வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக இந்த திடீர் மழை பெய்துள்ளது. பெங்களூரில் இரண்டு நாட்களாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.
ஹைதராபாத்தில் இரண்டு நாட்களாக விட்டு விட்டு மழை பெய்து கொண்டு இருக்கிறது. அதிலும் நேற்று ஹைதராபாத்தில் பெய்த மழைக்கு இடையே சாலைகளில் வெள்ளம் ஏற்பட்டது. நேற்று இரண்டு மணி நேரம் அங்கு விடாமல் கனமழை பெய்தது. இந்த கனமழை காரணமாக ஹைதராபாத்தில் சாலைகளில் வெள்ளம் ஏற்பட்டது
வானிலை மைய அறிவிப்பு: கடந்த 24 மணி நேரத்திற்கான வானிலை தொகுப்பு:
தமிழகத்தில் ஓரிம இடங்களில் மழை பெய்துள்ளது. புதுவை மற்றும் காரைக்கால் பதிகளில் வறண்ட வானிலை நிலவியது.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்)
கோடநாடு (நீலகிரி), பென்னாகரம் (தர்மபுரி) தலா 6, பையூர் AWS கிருஷ்ணகிரி), நெங்கல்
(கிருஷ்ணகிரி), பாளர் கிருஷ்ணகிரி தலா 5. ஆம்பூர் இகுப்பத்தூர்). மேலாலத்தூர் (வேலூர்).
தர்மபுரி (தர்மபுரி), தர்மபுரி PTD (தர்மபுரி, வாணியம்பாடி (திலப்பத்தூர்), நாட்றாம்பள்ளி
(திருப்பத்தூர்) தலா 4 வகேனக்கல் (தர்மபுரி), வடபுதுப்பட்டு (நிலப்பத்தூர்). உயனாமரத்தூர்
(இவைண்ணாமவை), டேனிஷ்பேட்டை (சேலம்) கேஆர்பி அணை (கிருஷ்ணகிரி),
கிருஷ்ணகிரி (சியஷ்ணகிரி), அவர் (தர்மபுரி), ஆலங்காயம் (திருப்பத்தூர்), கெலவரப்பள்ளி
அணை கிருஷ்ணகிரி) குடியாத்தம் (வேலூர்), கண்டேரிப்பள்ளம் (ஈரோடு) தலா 3, மேட்டூர்
(சேலம்), நடுவட்டம் (நீலகிரி), வரட்டுப்பள்ளம் (ஈரோடு) TCS மில் கேதாண்டபட்டி
(நிலப்பத்தூர்),எம்புவட்டப்பட்டி (கிகஷ்ணகிரி பாலவிதிர்) சேலம் (சேலம்), பாம்பார்
அணை (கிருஷ்ணகிரி), சத்தியமங்கலம் (ஈரோடு) தாலுகா அலுவலகம் திருப்பத்தூர்
(நிலப்பந்தூர்), ஆனைமடுவு அணை (சேலம்), போச்சம்பள்ளி ARG (கிஸஷ்ணகிரி),ஓமலூர்
(சேலம்), திருப்பூர் PWD (இலப்பூர்) தலா 2 மிமீ மழை பெய்தது.












Click it and Unblock the Notifications