சென்னையில் கணிக்க முடியாத வானிலை.. எப்போது மழை பெய்யும்? வெதர்மேன் கொடுத்த அப்டேட்!
சென்னை: சென்னையில் திடீரென மழை கொட்டும் என்றும், சிறிது நேரத்திற்கு பின்னர் மீண்டும் வெயில் இருக்கும் எனவும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப்ஜான் கூறியுள்ளார். நவ.25ம் தேதி வரை சென்னையில் வானிலை இப்படித்தான் இருக்கும் என்றும் அவர் கணித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது x பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது, "இலங்கைக்கு அருகே நிலை கொண்டிருக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது, குமரி கடலை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி நகர்ந்தால், தமிழகத்தின் பெருவாரியான மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது.

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் பரவலாக மழை பதிவாகியிருக்கிறது. டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் மிதமான மழை வரை பதிவாகியிருக்கிறது. சென்னையில் விட்டு விட்டு மழை பெய்யும். இந்த வானிலை நவ.25ம் தேதி வரை நீடிக்கும். இது கனமழையாக இல்லாமல், ரசிக்கக்கூடியதாக இருக்கும்.
புயல் சின்னத்தை பொறுத்தவரை, டிசம்பர் மாதத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறது. புயல் உருவாக இன்னும் 8-9 நாட்கள் இருக்கிறது. புயலின் போக்கை அறிய, இன்னும் கூடுதல் தகவல்கள் தேவைப்படுகிறது.
அடுத்த 24 மணி நேரத்தை பொறுத்தவரை, குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது குமரி கடலை நோக்கி நகர்ந்தால், தமிழகத்தில் மழைக்கு பரவலாக வாய்ப்பு இருக்கிறது. அனைத்து மாவட்டங்களிலும் விட்டு விட்டு மழை பெய்யும். குறிப்பிட்ட இடைவெளியுடன் அனைத்து மாவட்டங்களிலும் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது.
மயிலாடுதுறை, திருவாரூர் மற்றும் நாகை என, டெல்டா மாவட்டங்களை பொறுத்தவரை சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது. அதேபோல ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய தென் மாவட்டங்களில் சில பகுதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்புகள் உள்ளன. குறிப்பாக நெல்லையின் மாஞ்சோலை பகுதியில் அதி கனமழை பெய்யும்" என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
முன்னதாக இன்று காலை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்திருந்த அறிக்கையில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் திருப்பூர் ஆகிய 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
-
2031 வரை அண்ணாமலை காத்திருக்க மாட்டார்.. அவரின் உண்மையான திட்டம் இதுதான்.. வெளியான தகவல்! -
விஜய் வந்தும் வேலைக்கு ஆகல! சர்ச்சையை கிளப்பும் சட்டம் ஒழுங்கு.. டிஜிபி அதிரடி உத்தரவு! -
தமிழக மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் 34 'ஹார்டு டிஸ்க்குகளை திருடியவர்கள் குறித்து புதிய தகவல்கள் -
இன்னைக்கும் மழை விடாது.. 14 மாவட்டங்களில் வெளுக்க போகுது! சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை மையம் -
கோவை, நீலகிரியில்.. கன முதல் மிக கனமழை பெய்யும்! மொத்தம் 11 மாவட்டங்களுக்கு வார்னிங்! -
ரூ. 20,000 கோடி 'ஸ்மார்ட் மீட்டர்' திட்டத்திற்கு மூடுவிழாவா? அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம் -
பத்திரப்பதிவு செய்ய இனி சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் செல்ல வேண்டாம்! தமிழக அரசு அதிரடி! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
செந்தில் பாலாஜி கைதாகிறாரா? தவெக கடிதத்திற்கு ஓகே சொன்ன ஆளுநர்! மறுபடியும் முதல்ல இருந்தா? -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
கமல், கார்த்திக் கூடதான் கட்சி ஆரம்பிச்சாங்க! என்னாச்சு? அண்ணாமலைலாம் ஒரு ஆளே இல்லை! முஸ்தபா விமர்சனம் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை












Click it and Unblock the Notifications