தமிழ்நாட்டிற்கு மிக சிறந்த நாள்! சென்னையை நோக்கி வரும் "செல்".. அந்த 15 நிமிடம்! வெதர்மேன் வார்னிங்
சென்னை: சென்னை மற்றும் தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் நேற்று பெய்த மழை குறித்தும், இன்று பெய்ய உள்ள மழை தொடர்பாகவும் வெதர்மேன் பிரதீப் ஜான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னையில் நேற்று காலையில் இருந்து கனமழை பெய்து வருகிறது. பல இடங்களில் இரவு முழுக்க விட்டு விட்டு மழை பெய்தது. 10 இடங்களில் சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் மிக கனமழை பதிவாகி உள்ளது. அதன்படி,

கோடம்பாக்கம் - 8.4 செ.மீ.
கத்திவாக்கம் - 8.4 செ.மீ.
ஆலந்தூர் - 7.6 செ.மீ.
அண்ணா நகர் - 7.1 செ.மீ.
திருவிக நகர் - 7 செ.மீ.
தேனாம்பேட்டை - 7 செ.மீ.
பெருங்குடி - 6.8 செ.மீ.
அடையாறு - 6.7 செ.மீ.
நேற்று காலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரை பதிவாகி உள்ளது.
வெதர்மேன் வார்னிங்: இந்த நிலையில்தான் சென்னை மற்றும் தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் நேற்று பெய்த மழை குறித்தும், இன்று பெய்ய உள்ள மழை தொடர்பாகவும் வெதர்மேன் பிரதீப் ஜான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அதில், சென்னைக்கு நேற்று மிக சிறந்த நாள். தமிழ்நாட்டில் அதிக மழை பெய்த இடங்களில் சென்னை முதலிடத்தில் உள்ளது. சென்னையை நோக்கி சிறிய செல் வந்து கொண்டு இருக்கிறது.. அதாவது மிக சிறிய மேகக்கூட்டம் வந்து கொண்டு இருக்கிறது.
இதனால் சென்னையில் அடுத்த 30 நிமிடத்தில் மழை பெய்யும். பல இடங்களில் 10-15 நிமிடங்களுக்கு கண்டிப்பாக மழை பெய்யும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். சென்னையில் நேற்று டிஜிபி அலுவலகம் அருகே 130 மிமீ மழை பெய்துள்ளது. இதுதான் நேற்று தமிழ்நாட்டில் பெய்த மிக அதிக மழை ஆகும்.
எச்சரிக்கை என்ன?: அவர் தனது https://tamilnaduweatherman.in/ பக்கத்தில் இது தொடர்பாக கணிப்பை வெளியிட்டுள்ளார். அதில் , தற்போது MJO நிலை 1 ல் இருந்து மழைக்கு சாதகமான நிலை 2க்கு செல்ல உள்ளது. நவம்பர் 2ம் தேதி இது நகரும். டிசம்பர் 2ம் வாரம் வரை இருக்கும். இதனால் அடுத்த 25- 30 நாட்களுக்கு காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்தடுத்து உருவாகிக்கொண்டே இருக்கும் . இந்த காலத்தில் சென்னை - நாகை கடலோர பகுதிகளில் கனமழை பெய்யும். இந்த 30 நாட்கள் மழை மிக ஆக்டிவாக இருக்கும். டிசம்பர் 2 வரை மழை தொடரும்.,
இது போக இன்று கனமழை முதல் மிகக் கனமழை பெய்யும். சில பகுதிகளில் நவம்பர் 14 மற்றும் 15 ஆம் தேதிகளில் தீவிர மழை பெய்யக்கூடும். நாகை முதல் சென்னை வரை கடலோர மாவட்டங்கள் முழுவதும் தீவிர மழை பெய்யக்கூடும். இந்த பகுதிகள்தான் மழைக்கான ஹாட் ஸ்பாட்டாக இருக்க போகிறது. இங்கே மழை இல்லாமல் போவதற்கான வாய்ப்புகள் மிக மிக குறைவு.,
நாகப்பட்டினம், மயிலாடுதுறை, காரைக்கால், புதுச்சேரி , கடலூர், விழுப்புரம் கடற்கரை, செங்கல்பட்டு, சென்னை மற்றும் திருவள்ளூர் கடற்கரை ஆகியவை கவனிக்கப்பட வேண்டிய மாவட்டம். 13-ம் தேதி இரவு கடலூர்-நாகை-சென்னை பெல்ட்டில் மழை தொடங்கி நவம்பர் 14-ம் தேதிக்குள் மழையின் தீவிரம் அதிகரிக்கும். சென்னையில் 14-ந்தேதி கனமழை முதல் மிக கனமழை மற்றும் நவம்பர் 15-ம் தேதி கனமழை பெய்யும், என்றுள்ளார்.
குடிநீர் அளவு: மழை காரணமாக சென்னை குடிநீர் ஏரிகளில் சராசரி நீர் இருப்பு - 74.9%
5 முக்கிய ஏரிகளின் மொத்த கொள்ளளவான 11.757 டிஎம்சியில், தற்போது 8.806 டிஎம்சி நீர் இருப்பு உள்ளது.
செம்பரம்பாக்கம் - 85.87%
புழல் - 83.18%
பூண்டி - 57.63%
சோழவரம் - 58.83%
கண்ணன்கோட்டை - 86.6% அளவு நிரம்பி உள்ளது.












Click it and Unblock the Notifications