துணிகளை காய போட சரியான நேரம்.. சென்னையில் இன்னைக்கு மழை இருக்காது! வெதர்மேன் அப்டேட்
சென்னை: கடந்த மூன்று நாட்களாக சென்னையில் மழை பெய்து வந்தது. நேற்றிரவு சென்னையில் பரவலாக மழை பெய்திருந்தது. இந்நிலையில் இன்று சென்னையில் மழை இருக்காது என்றும், துணிகளை இன்று காய போட சரியான நாள் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியிருக்கிறார்.
இது குறித்து தனது x பக்கத்தில் அவர் பதிவிட்டிருப்பதாவது, "தென் தமிழ்நாட்டின் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் நேற்றிரவு கனமழை கொட்டி தீர்த்தது. கனமழை இன்று காலை வரை நீடிக்கும். அதன் பிறகு மழை படிப்படியாக குறையும்.

அதேபோல சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களை பொறுத்தவரை இன்று மழைக்கு பிரேக் விடப்பட்டிருக்கிறது. கடந்த மூன்று நாட்களாக இந்த மாவட்டங்களில் பரவலாக மழை பெய்திருக்கிறது. நேற்று மட்டும் 4 முறை சென்னையில் கனமழை பெய்திருந்தது. அந்த வகையில் இன்று துணிகளை உலர்த்த சரியான நேரம். இந்த மாவட்டங்களில் நாளை மீண்டும் மழை தொடங்கும்" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications