இது டிசம்பர் இல்லை.. இருந்தாலும் தென் சென்னையை சுத்துப்போட்ட மழை மேகங்கள்! வெதர்மேன் அலர்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை மழை தீவிரமடைந்துள்ள நிலையில், தற்போது தென் சென்னையில் மழை மேகங்கள் சூழ்ந்திருப்பதாக தனியார் வானிலை ஆர்வலரான பிரதீப் ஜான் எச்சரித்துள்ளார்.

வழக்கமாக தமிழகத்தில் ஏப்ரல் மாதத்தில்தான் கோடை வெயில் தொடங்கும். ஆனால், கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் பிப்ரவரி இறுதியில் வெயில் தொடங்கிவிட்டது. மார்ச்சில் ஏற்றம் கண்ட வெயில், ஏப்ரலில் உச்சத்தை தொட்டது. தமிழகத்தின் பரவலான மாவட்டங்களில் வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை கடந்து பதிவாகியிருந்தது.

Tamil Nadu Weatherman Pradeep John has said that rain clouds have surrounded


குறிப்பாக ஈரோடு, கோவை, கரூர் என கொங்கு மாவட்டங்கள், அதனை ஒட்டியுள்ள மாவட்டங்கள், வேலூர், திருப்பத்தூர், திருத்தணி என வட மாவட்டங்களில் வெயில் 105 டிகிரிக்கு அதிகமாக பதிவாகியிருந்தது. இப்படி இருக்கையில் தற்போது கோடை மழை தொடங்கியிருக்கிறது. ஆரம்பத்தில் தென் மாவட்டங்களில் தலையை காட்டிய மழை, கொஞ்சம் கொஞ்சமாக வட மாவட்டங்களை நோக்கி ஏற தொடங்கியது.

100 டிகிரியை தாண்டி வெயில் பதிவான பகுதிகளில் மழை புரட்டி எடுத்தது. ஏற்காடு, ஈரோடு, வேலூர் போன்ற மாவட்டங்களில் கனமழை பெய்தது. இந்த மழை தற்போது மேலும் தீவிரமடைந்துள்ளது. வழக்கமாக டிசம்பர் மாதத்தில்தான் சென்னையில் அதிக மழை பொழிவு இருக்கும். ஆனால் சென்னையில் இன்று காலை தொடங்கி மழை பெய்து வருகிறது.

‛மே 20ல் ரெட் அலர்ட்’.. தமிழகத்தில் அதி கனமழை வாய்ப்பு! அடுத்த 5 நாள் சம்பவம் இருக்கு.. வானிலை மையம்


இந்நிலையில் தென் சென்னையில் மேக கூட்டங்கள் திரளாக திரண்டிருப்பதாக தனியார் வானிலை ஆர்வலர், தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியுள்ளார். எனவே அடுத்த சில மணி நேரங்களுக்கு தென் சென்னையில் பரவலான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என்று கருதப்படுகிறது.

முன்னதாக இன்று காலை தனது x தளத்தில், “தற்போது நாம் பார்ப்பது வெறும் ட்ரெய்லர் மட்டும் தான். அடுத்த 5 நாட்களுக்கு தமிழ்நாட்டின் கடற்கரை பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நீடிக்கும் என்பதால் மெயின் பிக்சர் இன்னும் தொடங்கவே இல்லை. சென்னையில் இன்று வெயில் தொடங்கி, மீண்டும் அற்புதமான காலநிலைக்கு மாறும், எனவே இன்றும் உங்களது ரெயின்கோட்டை எடுத்துச் செல்லுங்கள்” என்று என்று பிரதீப் ஜான் கூறியிருந்தார்.

இது டிரெய்லர் தான்.. நெக்ஸ்ட் 5 நாள் முக்கியம்! சென்னை மக்களே ரெயின்கோட் ரெடியா? வெதர்மேன் அலர்ட்


அதேபோல இன்று காலை வானிலை ஆய்வு மையம் 9 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்டை கொடுத்திருந்தது. அதாவது தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், செங்கல்பட்டு போன்ற மாவட்டங்களில் இடி மின்னலுடன் லேசான மழை பெய்யும் என்று கூறியிருந்தது.

நேற்று வெளியிடப்பட்டிருந்த வானிலை அறிவிப்பில், 17-18ம் தேதியில் கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, தேனி ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் கொடுக்கப்பட்டிருந்தது. விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் கொடுக்கப்பட்டிருந்தது.

இதே 18-19ம் தேதிகளில் குமரி, நெல்லை, தென்காசி, தேனி, கோவை, நீலகிரிக்கு ஆரஞ்சு அலர்ட்டும், திருப்பூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, காரைக்கால், திருச்சி, கரூர், நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்டும் கொடுக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+