பனி பெய்தால் மழை பெய்யாது! கட்டுக்கதைகளை உடைத்த காற்றழுத்தம்! புயலாக நல்ல வாய்ப்பு! வெதர்மேன்
சென்னை: குளிரடித்தால் மழை பெய்யாது, வடகிழக்கு திசையை நோக்கிச் சென்றால் மழை வராது, பனி வந்தால் மழை வராது என்ற கட்டுக்கதைகளை இந்த காற்றழுத்தம் ஒன்றுமில்லாமல் ஆக்கிவிட்டது என வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் தனது எக்ஸ்வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: சென்னையில் நள்ளிரவில் சிறிய அளவிலான மேகக் கூட்டங்கள் 20 முதல் 40 மி.மீ மழையை கொடுத்தன. புதுவை கடலோர பகுதியிலிருந்து சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு கடலோர பகுதியிலிருந்தும் ஆழ்ந்த காற்றழுத்தம் தொலைவில் இருக்கிறது.

குளிரடித்தால் மழை பெய்யாது, வடகிழக்கு திசையை நோக்கிச் சென்றால் மழை வராது, பனி வந்தால் மழை வராது என்ற கட்டுக்கதைகளை இந்த காற்றழுத்தம் ஒன்றுமில்லாமல் ஆக்கிவிட்டது.
குளிர் வந்தால் மழை பெய்யாது- காற்றழுத்தமோ புயலோ கடலில் மையம் கொண்டிருந்தால் நிலத்தின் பக்கம் எப்போதும் வெப்பநிலை குறையும். எனவே பகல் நேரத்திலும் குளிர்ச்சியான சூழல் நிலவும். அந்த புயல் நம் தமிழக திசையை நோக்கி வர தொடங்கினால் லேசான வெப்பம் இருக்கும்.
வடகிழக்கு பக்கம் போனால் மழை வராது- வடகிழக்கு பக்கம் இந்த காற்றழுத்தம் போகும் என்பது தற்காலிகம்தான். திசையில் மாறுபாடு ஏற்படும் போது அந்த சிஸ்டம் தாமதமாகவும் குறைந்த வேகத்திலும் நகரும்.
பனி இருக்கு மழை வராது- வடகிழக்கு பருவமழை காலத்தில் மழை இல்லாத போது காலை நேரங்களில் பனியும் குளிர்ச்சியான சூழலம் நிலவும் என்பது பொதுவான ஒரு விஷயம்தான்.
எனவே இந்த ஆழ்ந்த காற்றழுத்தம் புயலாக மாற நல்ல வாய்ப்புகள் உள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சென்னை வானிலை மையம் கூறியிருப்பதாவது: நவ.29-ம் தேதி, டெல்டா மாவட்டங்கள், கடலூர், புதுவை, செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழைக்கும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், அரியலூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது.
நவ.30-ம் தேதி, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழைக்கும், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, காரைக்கால் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, கரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது.
நவம்பர் 29 மாலை முதல் நவம்பர் 30-ம் தேதி மதியம் வரை, வட தமிழக கடலோர மாவட்டங்கள், மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகள் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பலத்த தரைக்காற்றானது மணிக்கு 50 முதல் 60 கி.மீ வேகத்திலும், அவ்வப்போது 70 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். மீனவர்கள் நவ.30-ம் தேதி வரை கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
-
பொதுமக்களே உஷார்! இன்று 22 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை.. மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
வெளுத்து வாங்கப் போகும் கனமழை! இரவோடு இரவாக 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! வானிலை மையம் எச்சரிக்கை -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications