Rain: எல்லாமே நல்லபடியா போய்கிட்டிருக்கு! காஞ்சிபுரத்தில் இடியுடன் கூடிய மழை! வெதர்மேன் அப்டேட்
சென்னை: காஞ்சிபுரம் பகுதியில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். வரும் 23 ஆம் தேதி அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்த உருவாகிறது. அதன் பிறகு வடதமிழகத்தில் வெப்பச்சலனம் படிப்படியாக குறையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் தனது எக்ஸ்வலைதளத்தில் கூறியிருப்பதாவது: இதுவரை எல்லாமே நல்லபடியாகவே உள்ளன. காஞ்சிபுரத்திற்கு மேக கூட்டங்கள் நகர்ந்து விட்டன. அவை அங்கேயே நின்றுவிட்டால் சிறந்த மழையை கொடுக்கும்.
காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளது. அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்தம் உருவாகவுள்ளதால் வடதமிழகத்தில் மழை பெய்ய அதிக வாய்ப்புகள் உள்ளன. வரும் 23 ஆம் தேதி அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்த உருவாகிறது. அதன் பிறகு வடதமிழகத்தில் வெப்பச்சலனம் படிப்படியாக குறையும்.
தாம்பரம்- கூடுவாஞ்சேரி- சிறுச்சேரி இடைய் காற்று நிலை கொண்டிருக்கிறது. அரபிக் கடலில் வளி மண்டல காற்றழுத்தமானது உருவாவதால் இன்று மேற்கு பகுதியில் இருந்து காற்று நிலப்பகுதிக்கு வீசும். இதனால் இன்று மழையை என்ஜாய் செய்யுங்கள் என குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தில் அக்னி நட்சத்திர காலத்தில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இதனால் ஆங்காங்கே வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. தென் பகுதியில் அதிகளவு மழை பெய்து வருவதால் குற்றால அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்லும் நிலை உள்ளது.
அது போல் சதுரகிரி மலையில் உள்ள நீர் வீழ்ச்சிகளில் குளிக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்த மழை குறித்து சென்னை வானிலை மையம் கூறியிருப்பதாவது: தென்மேற்கு பருவமழை, கேரளாவில் அடுத்த 4-5 தினங்களில் துவங்குவதற்கான வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திரா- வடதமிழக பகுதிகளின் மேல் ஒருவளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
தெற்கு கர்நாடக உட்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளின் மேல் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், கர்நாடக கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்தியகிழக்கு அரபிக்கடலில் வருகின்ற 21-ஆம் தேதி வாக்கில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, வரும் 22-ம் தேதி வாக்கில், அதே பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும் எனவும் பிறகு இது வடக்கு திசையில் நகர்ந்து மேலும் வலுவடைய கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் கூறியது.
இதன் காரணமாக தமிழ்நாட்டில் இன்று ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பத்தூர், வேலூர், ராணிபேட்டை மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் 20 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
இந்தியாவை பந்தாட வரும் பிரச்சனை.. எல் நினோ + ஹார்முஸ் நெருக்கடி.. RBI-க்கு தலை சுற்றுகிறது! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்?












Click it and Unblock the Notifications