வெயிலே இல்லை.. 7 மாவட்டங்களில் மட்டும் சதம் போட்ட சூரியன்! தமிழகத்தில் கிளைமேட் சேஞ்ச்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கோடை மழை காரணமாக வெயிலின் தாக்கம் வெகுவாக குறைந்திருக்கிறது. இன்று வெறும் 7 மாவட்டங்களில் மட்டுமே வெயில் 100 டிகிரி ஃபாரான்ஹீட் என பதிவாகியுள்ளது.

தமிழகத்தில் வழக்கமாக ஏப்ரல் மாதத்தின் தொடக்கத்தில் தான் வெயில் அதிகரிக்கும். ஆனால், இந்த முறை பிப்ரவரி இறுதியிலேயே வெயில் வாட்ட தொடங்கி விட்டது. கடந்த ஆண்டு பருவமழை ஓரளவு கை கொடுத்தாலும், இந்த ஆண்டின் கோடை காலம் வறட்சியை தீவிரப்படுத்தியுள்ளது. தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது.

temperature in Tamil Nadu has dropped drastically due to rain

இதன் காரணமாக ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது. நேற்று தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு மழை குறித்து மஞ்சள் அலர்ட்டும் கொடுக்கப்பட்டிருந்தது. வட தமிழகத்திலும் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. எனவே வெப்பம் குறைந்திருக்கிறது. அதேபோல அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை பெய்யும் என்றும் வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.

எனவே மழை காரணமாக வெயிலின் தாக்கம் வெகுவாக குறைந்திருக்கிறது. இது குறித்து இன்று வெளியாகியுள்ள வெப்பநிலை அறிவிப்பில் 7 மாவட்டங்களில் மட்டுமே வெயில் 100 டிகிரி ஃபாரான்ஹீட்டை கடந்து பதிவாகியுள்ளது தெரிய வந்திருக்கிறது. அதாவது,

ஈரோடு - 103
வேலூர் - 103
திருத்தணி - 103
கரூர் பரமத்தி - 102
நாமக்கல் - 101
திருச்சி - 100
மதுரை விமான நிலையம் - 100

என வெயில் பதிவாகியுள்ளது. முன்னதாக இன்று மத்தியம் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருந்த அறிவிப்பில். "தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. மட்டுமல்லாது குமரிக்கடல் பகுதியின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

எனவே, இன்று தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர். மாவட்டங்களின் மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு. தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திலநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கணமழை பெய்யவாய்ப்புள்ளது.

நாளை ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரி இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

15ம் தேதி தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் மரி இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

16ம் தேதி தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பதிகள் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திண்டுக்கல், நாமக்கல், கரூர், திருச்சி, மதுரை, சிவகங்கை விருதுநகர் தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, தேனி, தென்காசி, திருநெல்வேலி கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது" என தெரிவித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+