தமிழ்நாட்டிற்கு சிறப்பான நாட்கள் வருகிறது! திரும்பும் 2014 சம்பவம்! தமிழ்நாடு வெதர்மேன் குட்நியூஸ்
சென்னை: தமிழ்நாட்டிற்கு கனமழை கொடுக்கும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி இன்னும் 5 நாட்களில் உருவாக உள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
இன்று சென்னையில் பல்வேறு இடங்களில் அதிகாலையில் நல்ல மழை பெய்துள்ளது. கடந்த ஒன்றரை மாத வெயிலுக்கு இடையில் திடீரென அதிகாலையில் மழை பெய்துள்ளது. தெற்கு சென்னை, மத்திய சென்னை பகுதிகளில் சில இடங்களில் கனமழை பெய்தது. தென் சென்னையில் சில பகுதிகளில் சாரல் மழை பெய்து வருகிறது.

இன்று அதிகாலை கிண்டி கோட்டம் கிண்டி, மயிலாப்பூர், வேளச்சேரி, தாம்பரம், ஆலந்தூர் மற்றும் சோழிங்கநல்லூர் தாலுகாக்களை உள்ளடக்கிய பகுதிகளில் மழை பெய்தது. அதிகாலை 3 மணி அளவில் சென்னையில் மழை தொடங்கியது.
5 - 6 மணி வரை மழை விடாமல் நீடித்தது. 6 மணி தாண்டியும் சில இடங்களில் சாரல் மழை பெய்தது. வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக இந்த திடீர் மழை பெய்துள்ளது. பெங்களூரில் இரண்டு நாட்களாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.
ஹைதராபாத்தில் இரண்டு நாட்களாக விட்டு விட்டு மழை பெய்து கொண்டு இருக்கிறது. அதிலும் நேற்று ஹைதராபாத்தில் பெய்த மழைக்கு இடையே சாலைகளில் வெள்ளம் ஏற்பட்டது. நேற்று இரண்டு மணி நேரம் அங்கு விடாமல் கனமழை பெய்தது. இந்த கனமழை காரணமாக ஹைதராபாத்தில் சாலைகளில் வெள்ளம் ஏற்பட்டது.
வானிலை அறிவிப்பு: இந்த நிலையில்தான் தமிழ்நாட்டிற்கு கனமழை கொடுக்கும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி இன்னும் 5 நாட்களில் உருவாக உள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
இன்னும் 5 நாட்களில் உருவாகும் என எதிர்பார்க்கப்படும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நமக்கு மிகப்பெரிய பாதுகாவலாக இருக்க போகிறது. இந்த யுஏசி பரவலான மழையைக் கொடுக்கும். மேலும் இந்த காற்று கிழக்கு தமிழ்நாட்டிற்கு திரும்பும். எனவே வெப்ப அலைகள் அடுத்த 2 வாரங்களுக்கு இருக்காது.
2014 மே மாதம் இதேபோன்ற அமைப்பு தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் பெரும் மழையை வழங்கியது எனக்கு நினைவிருக்கிறது. இன்னும் சிறப்பான நாட்கள் நமக்கு காத்திருக்கின்றன, என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
நல்ல நாட்கள்" மேலும் தமிழ்நாட்டிற்கு வானிலை ரீதியாக நல்ல காலம் பொறக்குது என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
ஜெய் ஜக்கமா நல்ல காலம் பொறக்க போவது !!! உச்ச கோடை வெயில் குறைய போகுது, தமிழ்நாட்டில் நல்ல மழை வர போகுது.
நீண்ட நேரம் பெய்த இடியுடன் கூடிய மழை காரணமாக வடக்கு உள்பகுதியில் வெப்பநிலை குறையும் நேற்று ஹைதராபாத்-கடப்பா புயல் நீண்ட பயணத்திற்கு பிறகு தமிழ்நாட்டை வந்தடைந்தது. சென்னையின் சில பகுதிகளில் சாலையை நனைக்கும் வகையில் மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது. ஆனால் வேலூர் ஆம்பூர் பகுதிகளில் மிக கனமழை பெய்ய போகிறது.
இப்போது திருவண்ணாமலையில் மழை மேகங்கள் நகர்ந்து வருகின்றன, அங்கு மழை பெய்யும். பொதுவாக இடியுடன் கூடிய மழை 2-3 மணி நேரம் நீடிக்கும். ஆனால் இது 12 மணிநேரம் வரை நீடிக்கிறது , தமிழ்நாட்டின் உட்புறத்தில் வெப்பம் அதிகரித்து உள்ளதால் இந்த மழை இன்னும் பலம் பெற்று வருகிறது. கள்ளக்குறிச்சி, பெரம்பாலூருக்கு இதனால் மழை பெய்யுமா என்று பார்க்கலாம், என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications