ரஜினி சார்... பெரும் துயரத்துக்கு நடுவே தூத்துக்குடிக்கு சினிமா சூட்டிங் போவது எல்லாம் எப்படி சரி?
தூத்துக்குடி: பெருமழை வெள்ளத்தில் ஒட்டுமொத்த தென்மாவட்டங்களில் கரை புரண்டோடும் பெரும் துயரம் நீடிக்கிறது.. இந்த மக்களின் துயரத்தில் துளியளவேனும் பங்கெடுக்காமல் இதே பெருமழை பெய்த வெள்ளம் பாய்ந்தோடிய மண்ணில் சினிமா சூட்டிங் நடத்துவதற்கு நடிகர் ரஜினிகாந்த் கால் வைக்க எப்படித்தான் மனது வந்ததோ தெரியவில்லை என்பதுதான் தென் தமிழ்நாட்டு மக்களின் பேராதங்கம்.
தமிழ்நாட்டுக்கு வந்து திரைத்துறையில் உச்ச நட்சத்திரமானவர் நடிகர் ரஜினிகாந்த். தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் 1980 முதல் 2021 வரை தொடர்ந்து பேசு பொருளாக இருப்பவர். தமிழ்நாடு சார்ந்த போராட்டங்களில் அத்திபூத்தது போல எப்போதாவது பங்கேற்பார். ஆனால் கர்நாடகாவுக்கு போய் அப்படியே தமிழ்நாட்டுக்கு எதிராக பேசுவார். இத்தனைக்கும் பிறகும் தமிழ்நாட்டின் பாவப்பட்ட ஜனங்கள், "சூப்பர் ஸ்டாராக" "தெய்வமாக" கொண்டாடிக் கொண்டே இருக்கின்றன.

ரஜினிகாந்தும் மன்றம் வைத்தார்.. ரஜினிகாந்தும் அரசியலுக்கு வரப் போகிறேன் என்றார்.. இந்த மன்றமும் அரசியலும் நிச்சயம் தமிழ் மக்களுக்கானது இல்லை என்பதை ஒருவகையில் புரிந்து கொண்ட தமிழ் ஜனங்க.. அந்த ரஜினிகாந்தை கேலி பொருளாகத்தான் பார்த்தனர். இதனால் ஆளை விட்டால் போதுமடா சாமி என அரசியல் முடிவில் இருந்து அந்தர் பல்டி அடித்து தப்பி ஓடிப் போனார்.
திரைப்படங்களிலும் பொது மேடையிலும் என்னை வாழ வைக்கும் தமிழ் மக்கள், என் சாமீ தமிழ் மக்கள் என்றெல்லாம் உருக உருக பேசி பேசி நடிக்கிறவர்தான் ரஜினிகாந்த். ஆனால் தமிழ் ஜனங்க என்ன பாதிப்பை எதிர்கொண்டாலும் தமிழ் ஜனங்க அள்ளி அள்ளி கொடுத்த அத்தனை ஆயிரம் கோடி ரூபாயில் ஒற்றை ரூபாயை கிள்ளி கிள்ளி கூட கொடுக்க மனமே இல்லாத நெஞ்சமற்ற கும்பலில் ஒருவராகவே ரஜினிகாந்த் எனும் மனிதரும் இருக்கிறார்.
இதை அப்பட்டமாக இன்று நிரூபித்தும் இருக்கிறார். வரலாறு காணாத பெருமழை.. ஒட்டுமொத்த தூத்துக்குடி, திருநெல்வேலியை உருக்குலைத்துப் போட்டிருக்கிறது. தூத்துக்குடி பழைய நிலைமைக்கு திரும்ப எத்தனை காலம் ஆகும் என்பதை சொல்லவே முடியாது என்பதுதான் யதார்த்தம்.. அந்த அளவுக்கு வெள்ளம் பாலம் பாலமாக தூத்துக்குடியை கூறு போட்டு கும்மி அடித்துவிட்டுப் போயிருக்கிறது.
கொஞ்சமும் கூட நெஞ்சிலே ஈரமும் இல்லை.. கொஞ்சமும் கூட இரக்கமுமே இல்லையே என்று சொல்வார்களே அதைப் போல,, அந்த தூத்துக்குடி மண்ணில் தமது சில நூறு கோடி புதிய சினிமா சம்பாத்தியத்தைப் பெறுவதற்காக "வேட்டையன்" சூட்டிங்குக்காக கால் வைத்திருக்கிறார் உச்சநட்சத்திரம் ரஜினிகாந்த் என்கிற போது எப்படி நாங்க கொதிக்காம இருப்போம் என்பதுதான் தெக்கத்தி சீமையின் கடும் கோபக் குரல்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications