நீயா? நானா? அவ்வளவு மழையையும் கொட்டி பார்! பல ஆயிரம் கன அடி நீரை உள்வாங்கும் ஆயன்குளம் அதிசய கிணறு!
திருநெல்வேலி: திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்களை வரலாறு காணாத கனமழை வெளுத்தெடுத்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் ஆயன்குளம் அதிசய கிணறு பல ஆயிரம் கன அடி வெள்ள நீரை சர்வ சாதாரணமாக உள்வாங்கிக் கொண்டே இருப்பது மீண்டும் பேசுபொருளாகி இருக்கிறது.
திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே முதுமொத்தன் மொழி ஊராட்சிக்குட்பட்டது ஆயன்குளம். இங்குள்ள கிணறு ஒன்றுதான் சில ஆண்டுகளுக்கு முன்னர் தலைப்புச் செய்தியாக அடிபட்டது. ஒவ்வொரு மழை வெள்ளத்தின் போதும் பல ஆயிரம் கன அடி உபரி நீர் இந்த கிணற்றுக்குள் திருப்பிவிடப்படும். ஆனால் ஒரு போதும் இந்த கிணறு நிரம்பி வழிந்ததே இல்லை என்பதுதான் அந்த அதிசயம். இதனால் இந்த அதிசய கிணறு குறித்து ஐஐடி பேராசிரியர்கள் உள்ளிட்டோர் ஆய்வும் நடத்தினர். அப்போது இந்த கிணறின் தன்மை, கிணற்றை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு எப்படி பயன்படுத்தலாம் என்பது குறித்து விவாதங்கள் நடந்தன.

தற்போது நேற்று காலை முதல் தற்போது வரை தென் மாவட்டங்களை கனமழை புரட்டிப் போட்டுக் கொண்டிருக்கிறது. திருநெல்வேலி தாமிரபரணி ஆற்றில் 1 லட்சம் கன அடி நீர் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் ஆயன்குளம் அதிசய கிணறுக்குள்ளும் பல ஆயிரம் கன அடிநீர் திருப்பிவிடப்பட்டுக் கொண்டிருக்கிறது. இத்தனை ஆயிரம் கன அடி நீரையும் கொஞ்சமும் சளைக்காமல் இந்த ஆயன்குளம் அதிசய கிணறு உள்வாங்கிக் கொண்டே இருப்பதுதான் இப்பெருமழையிலும் ஆச்சரியமானதாக இருக்கிறது.
-
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications