துபாயில் கடந்த 76 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு.. கொட்டி தீர்த்த கனமழை! திரும்பிய பக்கமெல்லாம் வெள்ளம்
அபுதாபி: பாலைவன பூமியான, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் துபாய் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்திருக்கிறது. இதனால் பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டிருக்கிறது. கடந்த 76 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிக மழை பதிவாகியுள்ளதால், நகரின் முக்கிய வீதிகள் நீரில் மூழ்கி இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
நிலைமையின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, துபாய் காவல்துறை பொதுமக்களை எச்சரித்தது அறிக்கை விடுத்துள்ளது. அதில், "உங்கள் பாதுகாப்பிற்காக.. அடுத்த சில மணிநேரங்களில் நிலையற்ற வானிலை நிலவும் என்பதால் கவனமாக இருங்கள். வெள்ளிக்கிழமை நண்பகல் வரை அத்தியாவசிய தேவைக்காக அன்றி வெளியே செல்வதைத் தவிர்க்கவும்" என்று கூறப்பட்டுள்ளது. துபாய் மற்றும் அபுதாபியில் இன்றும் மழை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள தனியார் துறை நிறுவனங்கள், இன்று வொர்க் ஃபரம் ஹோம் பணியை பின்பற்ற அந்நாட்டு மனிதவளம் மற்றும் எமிரேடிசேஷன் அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. பணியாளர்களின் நலன் கருதி இந்த அறிவிப்பு வந்துள்ளது. முன்னதாக, துபாய் அரசு ஊழியர்கள் அனைவரும் தொலைதூரத்தில் இருந்து பணியாற்ற வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது. பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு அபுதாபி மற்றும் துபாய் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இந்த வெள்ளத்தால் விமானப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. நேற்றிரவு மற்றும் இன்று காலை பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. லண்டன் காட்விக், ஹீத்ரோ, ஃபிராங்பர்ட் செல்லும் எமிரேட்ஸ் விமானங்களும், வார்சா மற்றும் பஹ்ரைன் செல்லும் ஃப்ளைதுபாய் சேவைகளும் ரத்தாகியுள்ளன. சாலைகளில் கார்கள் வெள்ளத்தில் மூழ்கியிருப்பது போன்ற காட்சிகள் இணையத்தில் வெளியாகி உள்ளன.
-
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications