தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு மழை.. வங்க கடலில் சூறாவளி வேற.. பறந்து வந்த மேஜர் அறிவிப்பு
சென்னை: வங்கக்கடலில் சூறாவளி வீசப்போவதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. அத்துடன் முக்கிய அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டுள்ளது.
இந்த வருடம் தாமதமாகவே, தென்மேற்கு பருவமழை துவங்கி உள்ளது.. நாட்டின் 80 சதவீத பகுதிகளில் இந்த ஆண்டுக்கான தென்மேற்கு பருவமழை ஆரம்பமாகிவிட்டது.. கடந்த 8ம் தேதி கேரளா மற்றும் குமரி முனைப்பகுதிகளில், மழை தொடங்கினாலும், எதிர்பார்த்த அளவுக்கு மழையை தரவில்லை.

கடந்த 2 நாட்களாகத்தான், கேரளாவில் மழை தீவிரமாகி வருகிறது.. இதனால் கேரளாவை ஒட்டிய தமிழகத்தின் பகுதிகளிலும் நல்ல மழை பெய்து வருகிறது...
நல்ல மழை: கடந்த வாரமும் சென்னையில் பலத்த மழை பெய்து வரும்நிலையில், இந்த வாரமும் அது தொடர்ந்தபடியே உள்ளது.. சென்னையில், வெயில் சுட்டெரித்து வருகிறது என்றாலும், தென்மேற்கு பருவமழையால் மழை கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், தமிழ்நாட்டின் சில பகுதிகளில், மணிக்கு 70 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என்றும் சென்னை ரெய்ன்ஸ் என்ற தனியார் அமைப்பு தெரிவித்திருந்தது.
அத்துடன், சென்னையின் மேற்கு உள்ளிட்ட பகுதிகளில் இன்றும் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறியிருந்தது. இந்நிலையில், தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது... வங்கக் கடலில் சூறாவளி காற்று வீசுவதால், வரும் 2ம் தேதி வரை, மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
வானிலை மாறுபாடு: இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் உள்ளதாவது: "மேற்கு திசைக் காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகம், புதுச்சேரியில், ஓரிரு இடங்களில் வரும், 2ம் தேதி வரை, மிதமான மழை பெய்யும். சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில், லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்சம், 37 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவாகும்.
வங்கக் கடலில், தென் தமிழக கடலோரம், மன்னார் வளைகுடா, குமரி கடல் மற்றும் இலங்கை கடலோர பகுதிகளில், மணிக்கு 55 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசுகிறது. எனவே, வரும் 2ம் தேதி வரை மீனவர்கள் மேற்கண்ட கடல் பகுதிக்குள் செல்ல வேண்டாம். நேற்று காலை நிலவரப்படி, மாநிலத்தில் அதிகபட்சமாக, கோவை சின்னக்கல்லாரில், 5 செ.மீ., மழை பதிவாகி உள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications