சென்னைக்கு இதுதான் கடைசி.. வெதர்மேன் சொன்ன குட் நியூஸ்! வானிலையில் மாற்றம்!
சென்னை: வடகிழக்கு பருவமழை முடிந்த பின்னரும், வட தமிழகத்தின் சென்னை உட்பட கடலோர மாவட்டங்களில் மழை வெளுத்து வருகிறது. இந்நிலையில், சென்னை மழை எப்போது முடிவுக்கு வரும் என்பது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் விளக்கமளித்துள்ளார்.
தமிழகத்தை பொறுத்தவரை, இரண்டு பருவங்கள் மழைப்பொழிவை கொண்டு வரும். ஒன்று தென்மேற்கு பருவமழை. இது ஜூன் மாதம் தொடங்குகிறது. தென் மாவட்டங்களில்.. குறிப்பாக, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மழைப்பொழிவை கொண்டு வருகிறது. இதற்கடுத்துதான் வடகிழக்கு பருவமழை தொடங்குகிறது.

பருவமழையும் சென்னையும்
அக்டோபர் இறுதியில் தொடங்கும் வடகிழக்கு பருவமழை, பொங்கல் வரை நீடிக்கும். வழக்கமாக பொங்கலுக்கு முன்னரே இந்த மழை முடிவுக்கு வந்துவிடும். இந்த ஆண்டும் இப்படித்தான் முடிவுக்கு வந்தது. ஆனால், வங்கக்கடலில் ஏற்பட்ட வானிலை மாற்றம் காரணமாக, பொங்கலுக்கு பிரேக் விட்ட மழை தற்போது வரை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை மற்றும் அதனை ஒட்டியுள்ள மாவட்டங்களிலும், டெல்டா மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது.
ஜனவரி மழை
ஜனவரில் சென்னைக்கு என இயல்பான மழை அளவு இருக்கிறது. ஆனால், இந்த ஆண்டு இந்த இயல்பை விட மழை கூடுதலாக பெய்திருக்கிறது. இந்த கூடுதல் மழையை மக்கள் பெரிய அளவில் ரசிக்கவில்லை. மழை காரணமாக கொசு உற்பத்தி அதிகமனதால், தமிழகத்தில் சிக்கன் குனியா பாதிப்பும் அதிகரித்திருக்கிறது.
குட் நியூஸ் என்ன?
இப்படி இருக்கையில் சென்னையில் மழை எப்போது முடிவுக்கு வரும் என்பது குறித்து அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. வெதர்மேன் இது குறித்து தனது x பக்கத்தில், "நல்ல மழை, சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளுக்கு பரவி வருகிறது. இந்த மழை அனுபவிக்கக்கூடியதாகதான் இருக்கும். நாளை முதல் மழை குறையும். இன்று இரவு தொடங்கி நாளை காலை வரை பெய்யும் மழைதான் நாம் காணும் கடைசி மழையாக இருக்கும். இதனையடுத்து மழைக்கு பெரிய பிரேக் இருக்கும்" என்று கூறியுள்ளார்.
ஆரஞ்சு மற்றும் மஞ்சள் அலர்ட்
முன்னதாக அடுத்த 2 மணி நேரத்திற்கான மழை குறித்த அப்டேட் வெளியாகியிருந்தது. அதில், இரவு 10 மணி வரை செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரத்திற்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதேபோல, சென்னை, ராணிப்பேட்டை, வேலூர், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவள்ளூர், திருவாரூர், திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் கனமழைக்கான மஞ்சள் அலர்ட் எச்சரிக்கையும் கொடுக்கப்பட்டிருக்கிறது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications