சென்னை மக்களே ஆபிஸ் முடித்து வீடு திரும்பும்போது கவனம்! லைட்டா மழை இருக்கும்.. வெதர்மேன் அப்டேட்
சென்னை: வட தமிழகத்தை ஒட்டிய வங்கக்கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மையம் வலுவிழந்திருக்கிறது. எனவே கனமழைக்கு வாய்ப்பு குறைவு என இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்நிலையில், இன்று மாலை லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் நவம்பர், டிசம்பர் மாதம் வந்துவிட்டாலே, கனமழைக்கு பஞ்சம் இருக்காது. அதுவும் சென்னை மக்கள் நவம்பர், டிசம்பரை கண்டு சில நேரங்களில் அச்சமடைந்திருக்கின்றனர். அந்த வகையில், இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திலேயே கனமழை தொடங்கிவிட்டது. செப்டம்பர் முதல் வாரத்தில் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி மெதுவாக வட தமிழகத்தை நோக்கி நகர்ந்து வந்தது. இது கொஞ்சம் கொஞ்சமாக வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாகவும், காற்றழுத்த மண்டலமாகவும் உருவானது. இதனால் சென்னைக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டது. சில ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.

வேளச்சேரி மக்கள் அங்குள்ள மேம்பாலங்களில் தங்கள் கார்களை பார்க் செய்தனர். ஆனால் மழை எதிர்பார்த்த அளவுக்கு பெய்யவில்லை. சென்னை தவிர்த்து தெற்கு ஆந்திராவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்தது. எனவே, சென்னை மக்கள் ஜஸ்ட்டு மிஸ்ஸில் தப்பினர்.
இப்படி இருக்கையில் ஓரிரு நாட்களுக்கு முன்னர் மீண்டும் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது மீண்டும் வட தமிழகத்தை நோக்கி நகர்ந்தது. ஆனால், இது அவ்வளவு வலுவானதாக இல்லை என்பதால், தற்போது வலுவிழந்துள்ளது. எனவே மிக கனமழைக்கான வாய்ப்பு குறைவு என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக சென்னைக்கு பெரிய பாதிப்பு இருக்காது எனவும் கூறியுள்ளது.
அந்த வகையில் அடுத்த மூன்ற மணி நேரத்தில் அதாவது, இரவு 7 மணி வரை விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டிருக்கிறது. அதேபோல சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், அரியலூர், பெரம்பலூர், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டிருக்கிறது.
மறுபுறம் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான், சென்னையில் 5-10 நிமிடம் அளவுக்கு மழையை கொடுக்கும் அளவுக்கு மேகங்கள் திரண்டுள்ளன. எனவே, அலுவலகம் முடித்து வீடு திரும்புவோர் கவனமாக இருங்கள் என்று கூறியுள்ளார். மட்டுமல்லாது நீண்ட நாட்களுக்கு பிறகு திருநெல்வேலியில் மழை பெய்து வருகிறது. அங்கு கனமழைக்கான மேகங்கள் திரண்டுள்ளன" என்று கூறியுள்ளார்.
-
கார் விற்பனையில் மாஸ் காட்டும் கொங்கு மண்டலம்.. கோவை, பொள்ளாச்சி, திருப்பூர்காரங்க வேற ரகம் பாஸ்..! -
டமால் டுமீல் தான்.. 4 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகுது கனமழை! மார்க் செய்த வானிலை ஆய்வு மையம்! -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள்












Click it and Unblock the Notifications