15 கிமீ வேகம்.. தமிழகத்தை நெருங்கும் பெங்கல் புயல்.. இப்போது எங்கே இருக்கு தெரியுமா?
சென்னை: ஃபெங்கல் புயல் நாளை கரையை கடக்க உள்ள நிலையில் அந்த புயல் 15 கிலோமீட்டர் வேகத்தில் தமிழகத்தை நெருங்கி வருகிறது. இரவு 9 மணி நிலவரப்படி அந்த புயல் எங்கு உள்ளது? என்பது பற்றிய முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு ஃபெங்கல் புயல் உருவானது. இந்த புயல் நாளை சென்னை, புதுச்சேரியில் கனமழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இந்த புயல் காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும், புயல் காரணமாக கடற்கரையோர பகுதியில் குறைந்தபட்சம் 60 கிலோமீட்டர் முதல் அதிகபட்சமாக 90 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த புயல் இன்று மாலை 6 மணிக்கு புதுச்சேரிக்கு தென்கிழக்கே 270 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டு இருந்தது. மணிக்கு 10 கிலோமீட்டர் வேகத்தில் அந்த புயல் நகர்ந்து வந்தது. இந்நிலையில் தான் இரவு 9 மணிக்கு ஃபெங்கல் புயலின் நிலை என்ன? என்பது பற்றிய முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி ஃபெங்கல் புயல் நாகைக்கு கிழக்கே 230 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னையில் இருந்து 250 கிலோமீட்டர் தூரத்திலும் நிலை கொண்டுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதோடு இந்த புயல் 15 கிலோமீட்டர் வேகத்தில் தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருகிறது என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த புயல் நாளை பிற்பகலில் காரைக்கால் - மாமல்லபுரம் இடையே புதுச்சேரி அருகே கரையை கடக்க உள்ளது. அப்போது 90 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் கடற்கரை பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று கூறப்பட்டுகிறது.
சென்னை, புதுச்சேரியை பொறுத்தமட்டில் கடல் தற்போது சீற்றமாக உள்ளது. அதோடு நாளை கடற்கரை பகுதிகளுக்கு மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications