தத்தளிக்குதே தென் தமிழ்நாடு! காணோமே 'தமிழக' அரசியல் கட்சிகள்.. ஓரவஞ்சனையா?குமுறும் தென் மாவட்டங்கள்!
சென்னை: மிக்ஜாம் புயல் கொண்டு வந்து கொட்டிய பெருமழையை விட இரண்டு மடங்கு மழை.. ஒரு ஆண்டில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில்.. தாமிரபரணியில் 1,00,000 கனஅடி நீர் கரை புரண்டோடியது.. இன்னமும் தீவுகளாய் துண்டிக்கப்பட்ட நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, குமரிமுனை கிராமங்கள்.. இத்தனை பேரிடரை சுமந்து நிற்கிறது தென் தமிழ்நாட்டு மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி.
தென் மாவட்டத்தைப் புரட்டி எடுத்த பெருமழை வெள்ளத்துக்கு எத்தனையோ காரணங்கள் இருக்கலாம்.. ராணுவமே வந்து களமிறங்கியும் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு போக முடியாத அளவுக்கு பல அடி உயர வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியபடிதான் நிலைமை இருந்தது. ராணுவ ஹெலிகாப்டர்கள் கூட இறங்க முடியாத பேரவலத்தின் நடுவில் நின்றதுதான் தென் தமிழ்நாடு.

தமிழ்நாடு அரசு தமது நிர்வாக கடமையை முழு வீச்சில் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்கிறது.. மத்திய அரசு முப்படைகளையும் களமிறக்கி தென் தமிழ்நாட்டு மக்களுக்கு ஆறுதலைத் தந்துள்ளது. இது எல்லாம் ஒரு பக்கம்..
சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் ஒரு புயலோ ஒரு மழை பாதிப்போ வந்தால் பக்கம் பக்கமாக அறிக்கை வெளியிடுகிற "அத்தனை" அரசியல் கட்சிகளின் தலைவர்கள்.. வரிந்து கட்டிக் கொண்டு வீதி வீதியாக கேமராக்களுடன் வலம் வரும் "அத்தனை" அரசியல் கட்சியினர் காதுகளுக்கு இன்னமும் தென் தமிழ்நாட்டு வெள்ள அபய குரல் எட்டாமல் இருப்பதுதான் 21-ம் நூற்றாண்டின் பேரவலமாக இருக்கிறது- வெள்ளத்தை விட!
படகுகளை எடுத்துக் கொண்டு ஒவ்வொரு ஏரியாவாக 'ரவுண்டு' அடித்து நாங்களும் களத்தில் நிற்கிறோம் என கலர் கலராய் ரீல் விடுகிற இந்த அரசியல் கட்சிகளின் காலடித் தடங்கள் இன்னமும் ஏன் தென் தமிழ்நாட்டு வெள்ளத்தில் படாமலேயே ஏன் இருக்கிறது என்பதும் புரியாததுதான்!
வட தமிழ்நாட்டு மக்களுக்காக குறிப்பாக சென்னை மக்களுக்காக வண்டி வண்டியாக உணவுப் பொட்டலங்களையும் நிவாரணப் பொருட்களையும் வாரி வாரி கொண்டு போய் சேர்த்த தன்னார்வலர்கள் எல்லாம் தென் மாவட்ட வெள்ளத்தில் திடீரென காணாமல் போவது என்பதெல்லாம் வரலாற்று துயரம்தான்!
வட தமிழ்நாட்டில் முகாமிட்டிருக்கும் தென் தமிழகத்தின் அரசியல் தலைவர்கள்தான் என்றில்லை.. தெற்கு வாக்கை மையமாகக் கொண்ட பல அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கூட வாய்மூடி மவுனிகளாகும் வகையிலா குற்றாலத்தின் மணிமுத்தாறின் திற்பரப்பு அருவியின் ஆக்ரோஷமான வெள்ள பேரிரைச்சல் வடக்கேயும் வந்து தாக்கிவிட்டுப் போனது?
தெற்கு தமிழ்நாடு வெள்ளம்/ துயரம் எப்போதும் தமிழ்நாட்டு தலைநகருக்கு 'கேளா' ஓலமாகத்தான் இருக்கிறது.. கன்னியாகுமரியில் கொத்து கொத்தாக மீனவர்களை புயல்கள் அள்ளிப் போனாலும் ராமேஸ்வரத்து மீனவர்கள் கொத்து கொத்தாக சுட்டுக் கொல்லப்பட்டாலும் கூட ஆந்திராவின் செம்மர காடுகளில் பறிபோன தமிழர் உயிர்களுக்கு அறைகூவல் விடுத்த அத்தனை குரல்களும் உயிரற்று அடங்கிப் போவது எவ்வளவு பேரவலத்தின் உச்சம் தெரியுமா?
தென் தமிழகத்தின் அண்டை மாவட்ட அரசியல் தலைவர்கள், தன்னார்வலர்களுக்கு கூட 144 ரகசிய தடை உத்தரவைப் போட்ட 'ஜனாதிபதி' யார் என்பது தெரியாமல் புளியங்குளத்திலும் ஶ்ரீவைகுண்டத்திலும் தூத்துக்குடி உப்பள கரையோரங்களில் காயல்பட்டினத்து கடலோரத்திலும் ஒருவருக்கு ஒருவர் ஒத்தாசையாக ஓடிக் கொண்டிருக்கிறது தெக்கத்தி ஜனம்!
எங்களுக்காக நடுவெள்ளத்தில் நின்ற அரசியல் தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள், நீந்தியும் படகை தூக்கிக் கொண்டு ஓடி வந்த மீனவ சொந்தங்களும் தெக்கத்தி மக்களுக்கு தெய்வங்கள்தான்.. விளம்பர வியாதிகளுக்காக வந்தவர்கள் விதிவிலக்கானவர்கள் என்பதையும் உணர்ந்ததுதான் தெக்கத்தி ஜனம்!
இப்போதுதான் என்றில்லை.. எப்போதும் தெற்கின் ஜாதிய அமைப்பு அரசியலுக்கும் சினிமாவுக்கும் தேவை.. எப்போதும் தெற்கின் வாக்கு அதிகாரத்துக்கும் ஆர்ப்பரித்தலுக்கும் தேவை.. தெற்கின் துயரம் மட்டும் கொரோனாவை விட பெருநோய் போல ஒவ்வாமையிடுவதுதான் ஏனாம்? என்பதுதான் பூமிப் பந்தின் மனித குலத்தின் தமிழரின் தாய்நிலமான தெற்கின் கனத்த கோபக் குரல்.
-
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications