சென்னையில் இடி மின்னலுடன் வெளுத்து வாங்கும் கனமழை.. மதுரையிலும் மழை கொட்டுது!
சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை கோயம்பேடு, அண்ணாநகர், முகப்பேர், வளசரவாக்கம், போரூர், அமைந்தகரை, அரும்பாக்கம், எழும்பூர், பெரியமேடு உள்ளிட்ட பகுதிகளில் தற்போது பரவலாக கனமழை பெய்து வருகிறது.
இதேபோன்று, சென்னை புறநகர் பகுதிகளான அம்பத்தூர், ஆவடி, பூந்தமல்லி, செங்குன்றம், மாதவரம் உள்ளிட்டப் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. மதுரை, சிவகங்கை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் தற்போது மழை பெய்து வருகிறது.

தமிழ்நாட்டில் இன்று ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி சென்னை உள்பட பல்வேறு பகுதிகளில் தற்போது மழை பெய்து வருகிறது.
தமிழகத்தில் கடந்த 4 ஆம் தேதி அக்னி நட்சத்திரம் தொடங்கிய நிலையில், 11 மாவட்டங்களில் வெயில் சதம் அடித்தது. அதிகபட்சமாக வேலூரில் 106 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது. எனினும், பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்து குளிர்வித்தது. இதனால் அன்று இரவே வெப்பம் தணிந்து குளுமையான சூழல் நிலவியது. இந்நிலையில் இன்றும் பல மாவட்டங்களில் மழை பெய்துள்ளது.
சென்னையில் இடியுடன் கூடிய கனமழை பெய்து கொண்டிருக்கிறது
— SHAAN SUNDAR🖤♥️🖤♥️ (@Sun46982817Shan) May 6, 2025
♥️♥️♥️♥️♥️♥️♥️♥️ pic.twitter.com/HRkt2jaaTs
தமிழகத்தில் இன்று இரவு 10 மணி வரை 14 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை மற்றும் வேலூர் மாவட்டத்தில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. இப்பகுதிகளில் 30 40 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும்.
இதேபோன்று திண்டுக்கல், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, தேனி, தென்காசி, கன்னியாகுமரி மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இன்று முதல் அடுத்த 7 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இன்றும், நாளையும் ஒரு சில இடங்களில் 30-40 கி.மீ. வேகத்தில் காற்றுடன் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
சென்னையில் எந்த பொண்டாட்டியும் இப்படி ஏமாத்தக்கூடாது.. சினிமாவையே மிஞ்சும் சம்பவம் -
Vijay Friend: "சார் அந்த கச்சத்தீவு.." நோ கமெண்ட்ஸ்னு சொன்ன மீன்வளத் துறை அமைச்சர் ஸ்ரீநாத்! -
பிச்சு உதற போகுது கனமழை.. 7 மாவட்டங்களில் டமால் டுமீல் தான்! வங்கக்கடல் சக்கரத்தால் இனி கூலிங் தான்! -
இந்தியாவை பந்தாட வரும் பிரச்சனை.. எல் நினோ + ஹார்முஸ் நெருக்கடி.. RBI-க்கு தலை சுற்றுகிறது! -
சென்னையில் பச்சிளம் குழந்தை கடத்தல்.. ஆக்ஷனில் இறங்கிய போலீஸ்! 5 மணி நேரத்தில் குற்றவாளி கைது! -
லேட் ஆகுது மதுரவாயல் பாலம்.. முடங்கும் கார் ஏற்றுமதி! சென்னை போர்ட்டில் நடப்பது என்ன? எக்ஸ்க்ளூசிவ் -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை












Click it and Unblock the Notifications