தூக்கிட்டு வாங்கடா அந்த செல்லத்தை.. அடுத்த சூப்பர் ஸ்டார் வெள்ளி தானா? வாங்கி குவிக்கலாமா? வேண்டாமா?
சென்னை: தங்கத்தின் விலை தொடர்ந்து புதிய உச்சத்தை தொட்டு வருவது அனைவரும் தெரிந்த விஷயம் தான். ஆனால் குறுக்க இந்த கவுசிக் வந்தா? என்பது போல் சமீப காலமாக தங்கத்துக்கு நிகராக வெள்ளி விலையும் அதிரடி உயர்வை சந்தித்து வருகிறது. ஒரே நாளில் ஏற்பட்ட திடீர் உயர்வு காரணமாக, முதலீட்டாளர்களும் பொதுமக்களும் வெள்ளி சந்தையை கூர்ந்து கவனிக்க தொடங்கியுள்ளனர்.
குறிப்பாக 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், வெள்ளி விலை குறித்த விவாதங்கள் பொருளாதார வட்டாரங்களில் அதிகரித்துள்ளன. சென்னையில் இன்று (10.01.2026) ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 800 ரூபாய் உயர்ந்து, ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது.
ஒரு கிராம் தங்கம் 100 ரூபாய் அதிகரித்து, 12 ஆயிரத்து 900 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. கடந்த ஆண்டு முழுவதும் உலகளவில் நிலவிய பொருளாதார அசாதாரண சூழல், போர்கள், பணவீக்கம் மற்றும் அமெரிக்க வட்டி விகித மாற்றங்கள் காரணமாக தங்கத்தின் விலை கடுமையாக உயர்ந்தது.

வெள்ளி விலை இன்று
இதனால் நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் கொண்ட மக்களுக்கு தங்க நகை வாங்குவது எட்டாக்கனியாக மாறியது. இந்த நிலையில், சமீப காலமாக தங்கத்தின் விலை ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்டாலும், வெள்ளி விலை மட்டும் தொடர்ந்து உயர்வை நோக்கி நகர்ந்து வருகிறது. இன்று ஒரே நாளில் வெள்ளி விலை கிராமுக்கு 7 ரூபாய் உயர்ந்து, ஒரு கிராம் 275 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 7 ஆயிரம் ரூபாய் அதிகரித்து 2 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது. இது வெள்ளி சந்தையில் ஏற்பட்டுள்ள தேவை மற்றும் விநியோகச் சிக்கல்களை வெளிப்படுத்துகிறது.
வெள்ளி முதலீடு 2026
2025 ஆம் ஆண்டில் மட்டும் வெள்ளி விலை சுமார் 140 முதல் 170 சதவீதம் வரை அபார வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. சோலார் பேனல்கள், மின்சார வாகனங்கள், 5ஜி தொழில்நுட்பம் போன்ற துறைகளில் வெள்ளியின் பயன்பாடு அதிகரித்து வருவதால், தொழில்துறை தேவை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அதே நேரத்தில், சீனா உள்ளிட்ட சில நாடுகள் வெள்ளி ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளதும், சுரங்க உற்பத்தி குறைந்துள்ளதும் சந்தையில் தட்டுப்பாட்டை உருவாக்கியுள்ளது. இதன் விளைவாக, வெள்ளி விலை தங்கத்தைப் போலவே பாதுகாப்பான முதலீட்டு விருப்பமாக பார்க்கப்படுகிறது.
எம்சிஎக்ஸ் வெள்ளி கணிப்பு
ஆனால் வெள்ளி முதலீடு முழுமையாக பாதுகாப்பானது என்று சொல்ல முடியாது. தங்கத்தை விட வெள்ளியின் விலை அதிக ஏற்ற இறக்கங்களை சந்திக்கும் தன்மை கொண்டது. ஜனவரி 2026 தொடக்கத்தில் ஒரே நாளில் கிலோக்கு 10 ஆயிரம் ரூபாய் வரை விலை சரிந்த நிகழ்வும் இதற்கு எடுத்துக்காட்டாகும். இத்தகைய விலை சரிவுகள் சிலருக்கு இழப்பை ஏற்படுத்தினாலும், புதிய முதலீட்டாளர்களுக்கு சரியான நுழைவு வாய்ப்பாகவும் கருதப்படுகிறது.
எம்சிஎக்ஸ் சந்தை
நிபுணர்கள் கூறுவதாவது, 2026 ஆம் ஆண்டில் எம்சிஎக்ஸ் சந்தையில் ஒரு கிலோ வெள்ளியின் விலை 2 லட்சத்து 75 ஆயிரம் ரூபாயிலிருந்து 3 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் வரை உயர வாய்ப்புள்ளது. இருப்பினும், கடந்த ஆண்டு போலவே உடனடி பெரிய லாபம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் முதலீடு செய்வது ஆபத்தானதாக இருக்கலாம். வெள்ளி முதலீட்டை நீண்ட கால அடிப்படையில், குறைந்த தொகையுடன், படிப்படியாக மேற்கொள்வதே பாதுகாப்பான வழி என பொருளாதார நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். மொத்தத்தில், தங்கத்துக்கு இணையாக வெள்ளி விலையும் தற்போது உச்சத்தை நோக்கி நகர்ந்து வரும் நிலையில், முதலீட்டாளர்கள் அவசர முடிவுகளை தவிர்த்து, சந்தை நிலவரத்தை கவனித்து அறிவுப்பூர்வமான முடிவுகளை எடுக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
-
Gold Price: தலைகீழாக குறைந்த தங்கம் விலை.. ஒரே நாளில் 2 முறை அதிரடியாக சரிந்தது! நகை பிரியர்கள் குஷி -
Gold Price: ஒரே நாளில் 3,040 அதிகரிப்பு.. மீண்டும் உச்சம் தொடும் தங்கம் விலை.. அம்மாடியோவ்! நகை பிரியர்கள் ஷாக் -
சவரன் ரூ.1.20 லட்சத்தைத் தாண்டிய தங்கம்.. இப்போது அடகு வைப்பது புத்திசாலித்தனமா? ‘பவுன்’ கணக்கு இதோ -
டிரம்ப் பேச்சால் மொத்தமும் தலைகீழாக மாறியது.. மறுபடியும் முதல்ல இருந்தா? தங்கம் விலையில் டிவிஸ்ட்! -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு












Click it and Unblock the Notifications