Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அரியர்ஸ் இருந்தாலும் ஓகே.. அனுபவம் வேண்டாம்.. சென்னை HCL-லில் இன்றும் - நாளையும் இண்டர்வியூ

Subscribe to Oneindia Tamil

சென்னை: முன்னணி ஐடி நிறுவனமான எச்சிஎல்-லில் இருந்து புராசஸ் அசோசியேட் (process Associate) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். டிகிரி முடித்தவர்கள் மற்றும் அரியர்ஸ் வைத்திருப்பவர்களும் இந்த இண்டர்வியூவில் பங்கேற்கலாம். இண்டர்வியூ இன்று (நவம்பர் 11) மற்றும் நாளை (நவம்பர் 12) என 2 நாட்கள் சென்னை சோழிங்கநல்லூரில் நடைபெற உள்ளது. தேர்வாகும் நபர்கள் அம்பத்தூரில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

உத்தர பிரதேசம் மாநிலம் நொய்டாவை தலைமையிடமாக கொண்டு உலகம் முழுவதும் எச்சிஎல் ஐடி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் இருந்து அடுத்தடுத்து புதிய வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன.

it jobs jobs hcl

அந்த வகையில் தற்போது எச்சிஎல் நிறுவனத்தில் புராசஸ் அசோசியேட் (Process Associate) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு யாரெல்லாம் விண்ணப்பம் செய்யலாம் என்பது பற்றி இங்கே விரிவாக பார்க்கலாம்.

புராசஸ் அசோசியேட் பணிக்கு ஏதாவது ஒரு பிரிவில் டிகிரி அல்லது பட்டமேற்படிப்பு முடித்திருக்க வேண்டும். பட்ட மேற்படிப்பை பொறுத்தமட்டில் 2025ம் ஆண்டில் எம்பிஏ, எம்ஏ, எம்எஸ்சி, எம்காம் படிப்பை முடித்தவர்களும் பங்கேற்கலாம். அரியர்ஸ் இருந்தாலும் பரவாயில்லை.
பிஇ, பிடெக், எம்எஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி, எம்சிஏ படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்ய வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் அனுபவம் என்பதும் தேவையில்லை. மாறாக ஓராண்டு வரை பணி அனுபவம் கொண்டிருப்பவர்கள் என்றால் அதற்கான உரிய ஆவணங்களுடன் இண்டர்வியூவில் பங்கேற்கலாம். இருப்பினும் விண்ணப்பம் செய்யும் அனைவருக்கும் ஆங்கிலத்தில் சரளமாக பேசவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். ஷிப்ட் என்பது ரோட்டோஷனல் முறையில் இருக்கும் இருக்கும். இதனால் இரவு பணி செய்யவும் தயாராக இருக்க வேண்டும்.

பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு Cab வசதி உள்ளது. அலுவலகத்தில் இருந்து வீட்டுக்கும், வீட்டில் இருந்து அலுவலகத்துக்கும் வாகனத்தில் பிக்-அப் மற்றும் டிராப் வசதி உள்ளது. இன்டர்நேஷனல் டிரெய்னர்ஸ் மூலமாக பயிற்சி வழங்கப்படும். தற்போதைய அறிவிப்பில் சம்பளம் குறித்து Best In Industry என்று மட்டுமே தெரிவிக்கப்பட்டுள்ளது. பணி அனுபவம், திறமையை பொறுத்து சம்பளம் நிர்ணயம் செய்யப்படும். அதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும்.

இந்த பணிக்கான இண்டர்வியூ இன்று (நவம்பர் 11), நாளை (நவம்பர் 12) என 2 நாட்கள் நடைபெற உள்ளது. காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை சென்னையில் நடைபெற உள்ளது. இண்டர்வியூவில் பங்கேற்க விரும்புவோர் லேப்டாப் எடுத்து செல்ல கூடாது. இண்டர்வியூ No 602/3/138, Elcot Economic Zone, Sholinganallur Medavakkam High Road, Sholinganallur, Chennai 600 119 என்ற முகவரியில் நடைபெற உள்ளது.

Face to Face முறையில் இண்டர்வியூ இருக்கும். பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னை அம்பத்தூரில் உள்ள எச்சிஎல் நிறுவனத்தில் நியமனம் செய்யப்பட உள்ளனர். வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே பணி இருக்கும். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமாகும். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இன்று மற்றும் நாளை நடக்கும் இண்டர்வியூவில் பங்கேற்கலாம்.

பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+