Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் 2026 மார்ச் 30ம் தேதிக்கான எபிசோடில், பாண்டியன் தான் கொடுத்த 10 லட்சம் பணத்தை கேட்டதால், செந்தில் லஞ்சம் வாங்கிய பணத்தை கொண்டு வந்து கொடுத்திருக்கிறார். ஆனால் இந்த உண்மைகள் மீனாவிற்கு தெரியாமல் இருக்கிறது. மறுபக்கத்தில் பாண்டியன் சரவணன் வாழ்க்கைக்கும் புதிய ஒரு முடிவு எடுத்திருக்கிறார். அது பற்றி விரிவாக பார்க்கலாம்.

Pandian Stores 2 serial Pandian Stores serial 2

பாண்டியன் ஸ்டோர்ஸ் அப்டேட்

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இன்றைய எபிசோடில், லஞ்ச பணத்தை வைக்கும் போது மீனாவிடம் சிக்கிக் கொண்ட செந்தில், அது அப்பாவுக்கு கொடுக்க பேங்கில் இருந்து எடுத்த பணம் என்று சொல்லி சமாளிக்கிறார். அதனை நம்பும் மீனா மறுநாள் காலையில், பணத்தை உன்னோட அப்பாவிடம் கொடுத்துவிடலாம் என்று சொல்கிறார். அதற்கு செந்தில் இப்போ வேண்டாம் என சொல்ல முயற்சி செய்கிறார். ஆனால் மீனா உடனே கொடுக்கணும் என ஸ்ட்ரிட்டாக சொல்ல செந்திலால் எதுவும் சொல்ல முடியாமல் நிற்கிறார்.

பாண்டியன் ஸ்டோர் 2 இன்றைய எபிசோடு

இதையடுத்து இருவரும் சேர்ந்து பாண்டியன் வீட்டுக்கு செல்கிறார்கள். அங்கு செந்தில் அந்த பணத்தை பாண்டியனிடம் கொடுக்கிறார். அந்த நேரத்தில் கோமதி அங்கு வந்து, அவன் பணத்தை கொடுத்தா உடனே வாங்கிக்கிறீங்களா, உங்க பையன் தானே அவன் என கேட்கிறார். பாண்டியன் அதைப் பொருட்படுத்தாமல் பணத்தை வாங்கி உள்ளே வைக்க செல்கிறார். அப்போது மீனா, சரியா இருக்கானு எண்ணி பார்த்துக்கோங்க என கூறுகிறார். அதற்கு பாண்டியன் உன்மேல் நம்பிக்கை இருக்கு என சொல்லி உள்ளே கொண்டு போகிறார்.

மிரட்டும் பாண்டியன்

அடுத்ததாக சாப்பிட்டு கொண்டிருந்த கதிரை பார்த்து, அவன் சொன்னபடி பணத்தை கொடுத்துட்டான், நீ எப்படி என கேட்கிறார். அதற்கு கதிர் சீக்கிரம் கொடுக்குறேன் என பதில் சொல்கிறார். இதற்குப் பிறகு பாண்டியன் கடைக்கு செல்கிறார். அங்கு சரவணன் கஸ்டமர்களுக்கு பொருட்கள் கொடுத்து கொண்டிருக்கிறார்.

அந்த நேரத்தில் அஞ்சலியிடமிருந்து சரவணனுக்கு போன் வருகிறது. அதை பாண்டியன் கவனிக்கிறார். பின்னர் சரவணன் டீ குடிக்க போகிறேன் என சொல்ல, பாண்டியன் உனக்கு அஞ்சலியை பிடிச்சிருக்கா என நேராக கேட்கிறார்.

சரவணனிடம் பாண்டியன் கேட்ட கேள்வி

அதற்கு முன்பு அந்த பெண்ணை உனக்கு பிடிச்சு நான் வேண்டாம்னு சொன்னதை நினைவில் வைத்திருக்கிறாயா, அவளை கல்யாணம் பண்ணிருந்தா உன் வாழ்க்கை நல்லா இருந்திருக்கும், நான் தான் உன் வாழ்க்கையை கெடுத்துட்டேன்னு நினைக்கிறியா என கேட்கிறார்.

அதற்கு சரவணன் அப்படியெல்லாம் இல்லைப்பா, எனக்கு காதல் மாதிரி எதுவும் இல்லை, சாதாரணமா பார்த்து பேசினோம் அவ்வளவுதான் என கூறுகிறார். அப்போது பாண்டியன், இப்போ அந்த பெண்ணுக்கு எந்த வாக்கும் கொடுக்காதே, கொஞ்ச நாள் பொறுத்திரு, டைவர்ஸ் கேஸ் முடிந்த பிறகு பார்ப்போம். இந்த விஷயத்தில் நான் உன்னோட இருப்பேன். ஆனா அவசரப்படக்கூடாது. கோர்ட்டில் கேஸ் முடியும் வரை அவளை பார்க்க கோவிலுக்கு போற மாதிரி எதுவும் செய்யாதே என கூறுகிறார்.

பாண்டியன் எடுத்த முடிவு

அதற்கு சரவணனும் சரி என ஒத்துக்கொள்கிறார். மறுபுறம், காந்திமதி அரசியை கோவிலுக்கு கூட்டிக்கொண்டு செல்கிறார். அங்கு வாசலை பார்த்துக்கொண்டே இருக்கிறார். அதை பார்த்து அரசி ஏன் அங்கேயே பார்த்துக்கிட்டே இருக்கிறீங்க என கேட்கிறார். அதற்கு காந்திமதி ஒரு முக்கியமான ஆளை வரச்சொன்னேன், இதோ வந்துட்டான் என சொல்கிறார்.

அது யார் என்று பார்த்தால் குமார். இவரை எதற்கு வரச்சொன்னீங்க என அரசி கேட்கிறார். அதற்கு காந்திமதி என் செல்லப் பேரனை பார்க்கணும்னு தோணிச்சு அதனால்தான் வரச்சொன்னேன் என கூறுகிறார். பின்னர் நீங்க பேசிக்கிட்டு இருங்க, நான் பூசாரியை பார்த்துட்டு வர்றேன் என சொல்லிவிட்டு காந்திமதி அங்கிருந்து செல்கிறார்.

இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது. போற போக்கை பார்த்தா பாண்டியனே சரவணன் மற்றும் அஞ்சலிக்கு கல்யாணம் செய்து வைப்பார் என்று தெரிகிறது. ஆனாலும் தங்கமயில் குழந்தையோடு இனி என்ன பண்ணப் போகிறாரோ என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+