Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரொம்ப மோசம்.. நினைச்ச மாதிரி இல்லை.. டெல்லிக்கு போன வலுவான வார்னிங்.. சிக்கலில் எடப்பாடி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: டெல்லி பாஜக தலைமை, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது கடுமையான அதிருப்தியில் உள்ளதாக உள்வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கூட்டணி அமைந்து எட்டு மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், அதன் செயல்பாடுகள் திருப்தியளிக்கவில்லை என்று பாஜக கருதுகிறது.

கூட்டணி அமைந்ததில் இருந்தே, என்.டி.ஏ. (தேசிய ஜனநாயகக் கூட்டணி) சிதைந்த நிலையில் உள்ளது. இந்தக் கூட்டணியில் அதிமுக, பாஜகவுடன் தன்னை இணைத்துக்கொள்ள மறுக்கிறது. ஆட்சி அமைத்தால் கூட பாஜகவை ஆட்சியில் உள்ளடக்க மாட்டேன் என அமித் ஷாவிடம் எடப்பாடி பழனிசாமி நேரடியாகக் கூறியது பாஜகவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.

tamilnadu Election 2026 2026 Edappadi Palaniswami

எடப்பாடி பழனிசாமி ஆட்சி

அதிமுக தனித்ததே ஆட்சி அமைக்கும் என்று எடப்பாடி தொடர்ந்து கூறி வருகிறார். பாஜகவிற்கு 20 சதவிகிதம் வாக்கு வங்கி இருந்தும் கூட எடப்பாடி அவர்களை மதிக்கவில்லை. காங்கிரசுக்கு திமுகவில் கிடைக்கும் மதிப்பு கூட பாஜகவிற்கு அதிமுக கூட்டணியில் கிடைக்கவில்லை.

கூட்டணிதான் சரியில்லை என்றால்.. உட்கட்சியிலும் நிலைமை சரியில்லை. அதிமுகவில் எடப்பாடி பழனிசாமியின் தனிப்பட்ட தலைமைப் பாணியால், அவரது கட்சியில் பல்வேறு மட்டங்களில் உள்ள பல தலைவர்கள் விலகி வருகின்றனர். செங்கோட்டையன் விலகியது எல்லாம் அந்த கட்சிக்கு மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்தும். இது அதிமுகவின் உட்கட்சி கட்டமைப்பைப் பாதித்து, கட்சி பலவீனமடைந்து வருவதாக அறியப்படுகிறது.

திமுகவுக்கு எதிராக ஒரு வலுவான கருத்தை உருவாக்க அவர் தவறிவிட்டார். அரசியல் எழுச்சியைத் தரக்கூடிய அண்ணாமலையின் திறமையை அவர் தொடர்ந்து புறக்கணிக்கிறார். அண்ணாமலையோ தனது சொந்த வழியில் வலுவாகக் களமிறங்கி வருகிறார்.

எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி ஸ்டாலினுக்கு எதிராக பெரிதாக அரசியல். செய்யவில்லை திமுக எதிர்க்கட்சியாக இருந்த போது செய்த வலுவான அரசியலை அதிமுக செய்வது இல்லை. அங்கேதான் எடப்பாடி சொதப்புகிறார். அதை சுட்டிக்காட்டும் நபர்களை எடப்பாடி புறக்கணிக்கிறார்.

அவரது கண்முன்னேயே, நடிகர் விஜய் பல நகர்ப்புறங்களில் அவருக்கு முன்னால் கணிசமாக முன்னேறியுள்ளார். எடப்பாடி பழனிசாமி தமிழ்நாட்டில் திமுகவுக்கு ஒரு நம்பகமான மாற்றுத் தலைவராகப் பரவலாகக் கூட பார்க்கப்படவில்லை. அவர் எளிதாக முதல்வராகிவிடலாம் என்று நினைக்கிறார். அதுதான் தவறு.

கூட்டணி அமைத்து எட்டு மாதங்களாகியும், தொகுதிப் பங்கீடு குறித்த எந்தவொரு தெளிவும் இன்னும் இல்லை. இவ்வளவு முன்கூட்டியே கூட்டணி அமைத்தும் இடங்களையும் வேட்பாளர்களையும் இறுதி செய்யாதது, கூட்டணியின் நோக்கத்தையே கேள்விக்குள்ளாக்குகிறது.

கூட்டணி முன்னேறவில்லை

அவரின் பிடிவாதம் காரணமாக ஓ பன்னீர்செல்வம் கூட்டணியில் இருந்து வெளியேறினார். டிடிவி தினகரனின் அமமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது. வேறு கட்சிகளும் கூட்டணிக்கு வர தயாராக இல்லை. கூட்டணி அமைந்து எட்டு மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், அதன் செயல்பாடுகள் திருப்தியளிக்கவில்லை என்று பாஜக கருதுகிறது.

மொத்தத்தில், கடந்த எட்டு மாதங்களில் இந்தக் கூட்டணி முன்னேறாமல், NDA பின்தங்கியுள்ளது என்றே அரசியல் விமர்சகர்கள், டெல்லி தலைகள் கருதுகின்றனர். எடப்பாடி பழனிசாமி சமீபத்திய தமிழக அரசியலின் மிகப்பெரிய அரசியல் தோல்வியாளராக டெல்லியால் பார்க்கப்படுகிறார். அவரை தமிழக அரசியல் வெற்றி ரீதியாக ராகுல் காந்தியை விட விட மோசமானவர் என்றும் டெல்லியில் சிலர் குறிப்பிடுகின்றனர்.

இது 2026 சட்டமன்றத் தேர்தல்களில் தமிழகத்தில் பாஜகவுக்கு நல்ல சமிஞை அல்ல. டெல்லி பாஜக தலைமையகத்திற்கு இந்த உண்மையான நிலவரம் முழுமையாகச் சென்றடைகிறதா என்ற கவலைகள் எழுந்துள்ளன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+