Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அதிமுகவை நம்பி சாத்தூரில் களமிறங்கும் நயினார் நாகேந்திரன்.. கைகொடுக்குமா முக்குலத்தோர் வாக்குகள்?

Subscribe to Oneindia Tamil

விருதுநகர்: சட்டசபைத் தேர்தலில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சாத்தூர் தொகுதியில் போட்டியிட உள்ளார். முக்குலத்தோர் சமூக மக்கள் பெரும்பான்மையாக இருந்தாலும், அதற்கு நிகராக நாயக்கர் சமூக மக்களும் அதிகளவில் உள்ளனர். இதனால் சாத்தூர் தொகுதியில் நயினார் நாகேந்திரன் கரை சேருவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தமிழக பாஜகவில் நயினார் நாகேந்திரன் தொடங்கி பலரும் தொகுதி மாறவிருக்கிறார்கள். நெல்லை தொகுதியில் 5 முறை போட்டியிட்டு 3 முறை வென்றிருக்கிறார் நயினார் நாகேந்திரன். இந்த தொகுதியில் நயினார் நாகேந்திரன் தொடர்ச்சியாக 2 முறை வென்றதே கிடையாது. 2001ல் வென்ற நயினார் நாகேந்திரன், 2006ல் தோல்வி அடைந்தார்.

Nainar Nagendran

பின்னர் 2011ல் வென்ற நயினார் நாகேந்திரன், 2016ல் தோல்வியடைந்தார். இதையடுத்து 2021ல் வென்ற நயினார் நாகேந்திரன், இம்முறை சாத்தூர் தொகுதிக்கு மாறியுள்ளார். சாத்தூர் தொகுதியில் போட்டியிடலாம் என்று நயினார் நாகேந்திரன் 3 மாதங்களுக்கு முன்பே முடிவு செய்து, அவரின் மகன் நயினார் பாலாஜி மூலமாக தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

சாத்தூர் தொகுதியை பொறுத்தவரை 40 சதவிகிதம் முக்குலத்தோர் வாக்குகளும், 35 சதவிகிதம் நாயக்கர் வாக்குகளும் இருக்கின்றன. திமுக தரப்பில் கடற்கரை ராஜ் களமிறக்கப்பட்டுள்ளார். நயினார் நாகேந்திரன் முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதும், கடற்கரை ராஜ் நாயக்கர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதும் கவனிக்கப்பட வேண்டி இருக்கிறது.

அதேபோல் கடற்கரை ராஜ் வெற்றிக்கு அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் வசம் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. கடற்கரை ராஜ் ஏற்கனவே சாத்தூர் தொகுதியில் அறிமுகமானவர் என்பது திமுகவுக்கு ப்ளஸ். அதேபோல் திமுகவில் இருக்கும் முக்குலத்தோர் வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் பெற வேண்டும் என்பதும் முக்கியமான டாஸ்க்.

நயினார் நாகேந்திரன் தொகுதிக்கு பரீட்சயம் இல்லாதவர் என்பதோடு, இதுவரை அந்த தொகுதி மக்களுடன் நெருங்கி பழகும் வாய்ப்பை பெறாதவர். இதனால் அதிமுக நிர்வாகிகளை நம்பியே நயினார் நாகேந்திரன் களமிறங்கி இருப்பதாக சொல்லப்படுகிறது. அதேபோல் நயினார் நாகேந்திரனின் வெற்றிக்கு எடப்பாடி பழனிசாமி உத்தரவாதம் அளித்துள்ளதாகவும் கூறுகின்றனர்.

இதனால் களம் மண்ணன் மைந்தர் vs வெளி மாவட்டத்துக்காரர் என்ற வகையில் நகர்வதாக தெரிகிறது. அதேபோல் சாத்தூர் தொகுதியில் அதிமுக சார்பாக போட்டியிட சிலர் ஆயத்தமாகி வந்தனர். கடைசி நேரத்தில் சாத்தூர் தொகுதி பாஜக பக்கம் அளிக்கப்பட்டதால், அதிமுகவினர் நயினார் நாகேந்திரனுக்கு தேர்தல் பணி செய்வார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+